மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வனத்தின் வேலியாகக் காட்சியளிக்கும் வகையில், அடர்ந்தும் பாதுகாப்பாகவும், களாக்காய் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதன் சீசனாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ளது. இப்பகுதிகளில் விளையும் இவை, மலைவாழ் மக்களுக்கு வருமானம் தருவதாகவும் உள்ளன. தித்திப்பும், புளிப்பும் சேர்ந்த கலவைதான் இந்தக் களாக்காய். காட்டுக்குள் வளர்ந்தாலும், இதன் பூ, காய், பழம், வேர் என மொத்தமும் மருத்துவ குணம் கொண்டவை. இரும்புச் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை குறைக்கவும் இந்தக் காய்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜீரண சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளதால், வீடுகளில், உணவுடன் களாக்காய் ஊறுகாயும் இடம் பெறுகின்றன.
இது ஒரு சீசன் காய் என்பதால், கிடைக்கும் காலத்திலேயே ஊறுகாயாக போட்டு வைத்து கொள்வார்கள். இதற்குக் காரணம், கிட்டத்தட்ட எலுமிச்சையை போலவே குணமுள்ளது இந்த களாக்காய். வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம், அஜீரண பிரச்னைகளை களாக்காய் சரி செய்கிறது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. நோய் தொற்றுகளை அண்ட விடாது.
0 Comments: