சனி, 7 செப்டம்பர், 2024

மங்களூர் மசாலா தோசை செய்வது எப்படி......

மங்களூர் மசாலா தோசை செய்வது எப்படி......
 
 
தேவையான பொருட்கள்
 
தோசை மாவு – 2கப்
நெய்/ எண்ணெய் தேவைக்கு
இட்லி பொடி – தேவைக்கு
 
உருளை ஸ்டப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:
 
உருளை கிழங்கு -1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி-1
பச்ச மிளகாய் – 3-4(கார தேவைக்கு)
சாம்பார் பொடி – 1டேபில் ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள்தூள் -சிறுது
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு, சீரகம் – 1ஸ்பூன்
உளுந்து-1/2 ஸ்பூன்
கடலைபருப்பு – 1ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 2-3
கறிவேப்பிலை ஒரு கொத்து.

தக்காளி சட்னி:
 
பல்லாரி வெங்காயம்- 1
தக்காளி – 3-4
சிகப்பு மிளகாய் – 5 (கார தேவைக்கு)
மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு – தலா அரை ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2பல்
கடுகு -1/4ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கொத்தமல்லி இலை சிறுது
ந.எண்ணெய் – 2ஸ்பூன்

உருளை ஸ்டப்பிங் செய்முறை:
 
1.முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
 
2.கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.
 
3.நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 
தக்காளி சட்னி செய்முறை:
 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
 
நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
 
மசாலா தோசை செய்முறை:
 
தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும். மேலே சுற்றி வரை நெய்/எண்ணெய் சிறுது ஊற்றவும். 1-2நிமிடங்கள் கழித்து அதன் மேல் பரவலாக தக்காளி சட்னி தேய்க்கவும் அதன் மீது இட்லி பொடி சிறுது தூவி அதன் மேல் உருளை ஸ்டப்பிங் பரவலாக வைத்து மேலே சிறுது எண்ணெய் ஊற்றி முக்கோண வடிவில் மூடிவிடவும்..

சுவையான மங்களூர் மசாலா தோசை ரெடி…
தேங்காய் சட்னி, சாம்பர் பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…
Previous Post
Next Post

0 Comments: