பொதுவாக நைவேத்தியத்திற்காக அப்பம் செய்கின்றபொழுது நெய்யில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - முக்கால் கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் அல்லது நறுக்கியது - கைப்பிடியளவு
சோடா உப்பு - சிட்டிகையளவு
ஏலப்பொடி - அரை ஸ்பூன்
நெய் - பொரிக்கத் தேவையான அளவு
வாழைப்பழம் - 2
செய்முறை:
வாழைப்பழத்தை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட வெல்லம், மாவுப்பொருள்கள், ஏலக்காய் பொடி, சோடா உப்பு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து அழுத்திப் பிசையவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் அல்லது பால் சேர்த்துக் கொள்ளலாம். தோசை மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளுங்கள்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து, குழிக்குள் நெய் தடவி, மாவை ஊற்றி, மேலே சில துளிகள் நெய்விட்டு சுட்டு எடுங்கள்.
மாவை அரை மணிநேரம் ஊறவைத்து சுட்டால் அப்பம் பஞ்சு போல மெத்து மெத்தென்று இருக்கும்.
0 Comments: