வெள்ளி, 13 செப்டம்பர், 2024

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!


ஹார்மோன்களில்
நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தாக்கும் தைராய்டு உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைளுக்கு தொடர்புடையது.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.

ஆனால், உண்மையிலியே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விடமுடியாது. அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

சரி இந்த தைராய்டு பிரச்சனையை எப்படி விரட்டுவது என்றால் வெறும் மாத்திரை மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று இந்த கட்டுரையில் காண்போம்.

பால் பொருட்கள்.

கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.

ஆல்கஹால்.

தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

பேக்கரி உணவுகள்.

பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக் கோஸ்,
காலிஃப்ளவர்.

அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில் இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

மயோனைஸ் மற்றும்
வெண்ணெய்.

இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்

தைராய்டை சரிசெய்யும் 15 ஆரோக்கிய உணவுகள்!!!

1) ஸ்ட்ராபெர்ரி.

உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

2) காளான்.

செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

3) பூண்டு.

செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

4) பசலைக் கீரை.

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.

5) மாட்டிறைச்சி.

மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

6) முட்டை.

முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

7) தானியங்கள்.

தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

8) ப்ராக்கோலி.

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

9) மாட்டின் கல்லீரல்.

மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.

10) தக்காளி.
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

11) தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

12) கடல் சிப்பி.

தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

13) உருளைக்கிழங்கு.

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

14) கொள்ளு.

அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.

15) கடல் பாசி.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது சிறந்தது.
Previous Post
Next Post

0 Comments: