செவ்வாய், 3 செப்டம்பர், 2024

முடக்கத்தான் கீரை பருப்பு பொடி....

முடக்கத்தான் கீரை பருப்பு பொடி....

தேவையான பொருட்கள்
 
1 கப் காய வைத்த முடக்கத்தான் கீரை
1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1டீஸ்பூன் மிளகு
1டீஸ்பூன் சீரகம்
5-6 மிளகாய் வற்றல்
1/2 ஸ்பூன் பெருங்காய தூள்
நெல்லிக்காய் அளவுபுளி
தேவைக்குஉப்பு
1டீஸ்பூன் வெல்லம்
1டீஸ்பூன் வெல்லம் 

சமையல் குறிப்புகள்

முதலில் முடக்கத்தான் கீரையை 2-3 வாட்டி நன்றாக கழுகி ஈரம் போக நிழலில் காய வைத்து எடுக்கவும். தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக்கவும்

ஸ்டவ்வில் வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பு போட்டு நல்ல வாசம் வரும்வரை வறுத்துக்கவும், அத்துடன் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்துக்கவும்

கடைசியாக உப்பு, பெருங்காய தூள் சேர்த்து கிளறி ஸ்டாவ்வ் ஆப் செய்து வேறொரு தட்டில் போட்டு ஆறவிட்டுக்கவும்

அதே வாணலி சூட்டில் ஏற்கனவே காய வைத்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரை போட்டு 1 நிமிடம் கிளறி ஆற விட்டு மிக்ஸியில் முதலில் பருப்பு போட்டு ஒரு சுத்து சுத்தி பிறகு கீரையை போட்டு நன்றாக பொடிக்கவும்..

ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து ஒரு சுத்து சித்தி பிறகு ஒரு தட்டில் போட்டு ஆற விட்டு ஏர் டய்ட் டப்பாவில் எடுத்து வைத்துக்கவும். முடக்கத்தான் கீரை பருப்பு பொடி தயார்.... சாதத்துடன் ஒரு ஸ்பூன் பருப்பு பொடி, ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட கசப்பு இல்லாமல் மிக அருமையாக இருக்கும்....
Previous Post
Next Post

0 Comments: