தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
காரட் - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
மக்காச்சோள மாவு - 1/2 கப்
கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் தூள் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை:
சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.
சிறிது எண்ணையைக் காயவைத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறி மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
விரும்பிய வடிவில் கட்லெட்கள் தயாரித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்த மக்காச் சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
காயும் எண்ணையில் பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறவும்.
0 Comments: