சனி, 5 அக்டோபர், 2024

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.

முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்
.
முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும்,
 மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை - இருமலை போக்கும்.

சாணக்கீரை - காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
Previous Post
Next Post

0 Comments: