*ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சாப்பிட்டு பலன் பெறலாம்.* தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....
*பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது.
*பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.
*மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது
பொதுவாக
வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்குவோம். வெயில் காலம் முடிந்ததும் அந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். அந்த வகையில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பாதாம் பிசின். வெயில் காலத்திற்கு மட்டும் சாப்பிட வேண்டிய பொருளாக இது திகழ்வது கிடையாது. இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.
பொதுவாக *வெயில் காலத்தில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், நன்னாரி சர்பத், எலுமிச்சம்பழ ஜூஸ், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய்* போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணமாவதை நம்மால் தவிர்க்க முடியும். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை மட்டும் தான் சரி செய்பவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு பொருளுக்கும் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் *பாதாம் பிசினில்* இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை பற்றியும் அதை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.
பாதாம் பிசின் *பெண்களுக்கு* மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை இருக்கும் பெண்கள் தினமும் பாதாம் பிசினை சாப்பிட்டு வர மாதவிடாய் சுழற்சி என்பது சீராக ஏற்படும். கருவுற்றிருக்கும் பெண்கள் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் வயிற்றில் இருக்கக்கூடிய கருவிற்கும் மிகுந்த ஊட்டச்சத்து தருவதோடு கருவில் இருக்கும் குழந்தையின் எலும்புகள் வலு பெறுவதற்கு உதவி புரிகிறது. தினமும் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைகிறது. இவ்வாறு குளிர்ச்சி அடைவதால் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் முடியை அடர்த்தியாக வளரச் செய்யவும் உதவுகிறது.
தலை முடிக்கு மட்டுமல்லாமல் பாதாம் பிசினை நாம் தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் நம்முடைய சருமமும் இயற்கையிலேயே இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஏஜிங் பண்புகள் சுருக்கத்தை நீக்க உதவுகிறது. இதை உணவாக எடுத்துக் கொண்டால் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கும் தடவுவதன் மூலம் முகச் சருமம் மிகவும் மிருதுவாகவும் அழகாகவும் சுருக்கமின்றியும் தென்படும்.
குழந்தைகள் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் எலும்புகள் வலுப்பெறுவதோடு மட்டுமல்லாமல் மூளையின் செயல்பாட்டுத் திறன் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. தசை பிடிப்பால் அதிகளவு பாதிக்கப்படும் நபர்கள் தொடர்ச்சியாக பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடு பெறுவதோடு மட்டுமல்லாமல் தசைகள் வலுப்பெறும். இயற்கையான முறையில் அதேசமயம் மிகவும் பாதுகாப்பாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் பாதாம் பிசினை ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கள் உணவில் சேர்த்து வர அவர்களின் உடல் எடைக்க கணிசமான முறையில் அதிகரிக்கும்.
*பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். உடலின் அதிக சூட்டை தணிக்கிறது.
*பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் 90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம். இதனால் எடை தூக்குபவர்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்
*பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவையும் முறைப்படுத்துகிறது. பாதாம் பிசினை உணவில் வழக்கமாக எடுத்துக்கொண்டால், கொழுப்பை குறைப்பதுடன், உடலில் ரத்தத்தின் அளவையும் பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
*பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்களும், மினரல்களும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது.
*சருமத்தை ஃப்ரி ரேடிக்கல்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த ஃப்ரி ரேடிக்கல்களே இளம் வயதிலே வயோதிக தோற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக உள்ளன.
*பாதாம் பிசின், உடல் வலி மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்துகிறது. இதனால் தசைகள் வலுவடைகிறது. இது உடலில் ஆரோக்கியமான தசைகள் உருவாக வழிவகுக்கிறது.
*இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளுக்காக இதை தினமும் உட்கொள்ளலாம்.
0 Comments: