வெள்ளி, 25 அக்டோபர், 2024

மூங்தால் ஃப்ரை செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மூங்தால் ஃப்ரை


தேவையானவை: 
பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை: 
பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இது ஒரு மாதம் வரை கெடாது.
Previous Post
Next Post

0 Comments: