நாவில் வைத்ததும் கரைந்து போகும் நெய் மைசூர்பாகு ரெசிபி:
தேவையானப் பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 21/2 கப்
நெய் - 2 கப்
செய்முறை:
1.கடலைமாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2.நெய்யை சூட வைத்து கரைத்துக் கொள்ளவும்.
3. அடி கனமான ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
4. சர்க்கரை பாகு வைத்த உடனே பாகில் சிறிது சிறிதாக மாவையும் நெய்யையும் சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். அடுப்பை லோப் பிளேமில் வைத்து தான் மாவை பாகில் இட்டு கிளற வேண்டும்.
5.இப்படியே மாவையும் நெய்யையும் மாறி மாறிச் சேர்த்து கிளறவும்.
6. நெய்யுடன் மாவு பொங்கி வரும் சமயத்தில் அடுப்பை ஆஃப் செய்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்த தாராஸ் கிச்சன் ஸ்டைலில் நெய் மைசூர் பாகு ரெடி.
7. மைசூர் பாகு ஆறியதும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் துண்டுகள் இட்டு முந்திரி பாதாம் பிஸ்தா தூவி கொடுக்கலாம் பிரண்ட்ஸ்.
8. இந்த மைசூர் பாகு வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
பி.ற கு:
நெய் அதிகம் வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளலாம்.
0 Comments: