நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.
சீப்பு சீடை
தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி, தேங்காய் பால், உப்பு, எண்ணெய்.
செய்முறை
உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி தயாரிப்பதற்கு உளுந்தையும்,பாசி பருப்பையும் வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசி பருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் தண்ணீர் தெளித்து மாவை மிருதுவாக தயாரிக்கவும்.
தயாரித்து வைத்துள்ள மாவை சீப்பு சீடை வடிவ தட்டு வைத்த முறுக்கு குழலில் வைத்து பிழியவும்.
பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு பாதி பாதியாக வெட்டவும்.
வெட்டிய மாவை எடுத்து விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி இரு புறங்களும் இணையுமாறு மடக்கி கொள்ளவும். சீப்பு சீடை பொரிப்பதற்கு தயார்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள சீடையை பொரிக்கவும்.
சீடை பொன்னிறமாக பொரிந்த பின்பு அதனை எடுத்து எண்ணெய் வடிந்த பின் காற்று போகாத பாத்திரத்தில் வைத்து ஒரு வாரம் மொறு மொறுப்புடன் சுவைக்கலாம்.
மேற்கண்ட உணவுகளை செய்து ருசித்து பார்த்து தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்புட்டுங்கள்.
0 Comments: