வியாழன், 24 அக்டோபர், 2024

கார தட்டை செய்யும் முறை

சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.

கார தட்டை


தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, வறுத்த பொறிக்கடலை, கடலை பருப்பு, நுணுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு, எண்ணெய்.

செய்முறை

கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். அதே நேரத்தில் கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் உளுந்து பொடியை வறுத்து எடுக்கவும். ஒரு கப் அரிசி மாவிற்கு இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு உளுந்து மாவு சேர்க்க வேண்டும். வறுத்த மாவுகளை ஓர் தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
வறுத்த மாவுகளுடன் பொறிக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.
ஓர் சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை நன்கு பொரிக்கவும்.
இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்தால் காரமான தட்டை தயார்.
Previous Post
Next Post

0 Comments: