வெள்ளி, 25 அக்டோபர், 2024

பாதுஷா செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பாதுஷா 

தேவையானவை
மைதா - 200 கிராம், 
சர்க்கரை - 300 கிராம்,
உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, 
எண்ணெய் - கால் கிலோ, 
நெய் - ஒன்றரை டீஸ்பூன், 
பால் - ஒரு டீஸ்பூன்,
கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, 
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை:  
உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

Previous Post
Next Post

0 Comments: