வெள்ளி, 25 அக்டோபர், 2024

கப்கேக் செய்வது எப்படி......?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கப்கேக் செய்வது எப்படி......?

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 100 கிராம்
பொடித்த சீனி - 100 கிராம்
முட்டை - 2
மைதா மாவு - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
ரோஸ் எஸென்ஸ் - 1 தேக்கரண்டி
பேப்பர் கேஸ் - 25

செய்முறை:

மாவையும் பேக்கிங் பவுடரையும் 3 தடவைகள் சலிக்கவும்.

வெண்ணெயையும் சீனியையும் நன்கு அடிக்கவும்.

முட்டைகளை நன்கு அடித்து எஸென்ஸ் கலந்து மறுபடியும் சற்று கலக்கவும்.

வெண்ணெய்க் கலவையில் சிறிது சிறிதாக முட்டையைக் கலந்தவாறே அடிக்கவும்.

பிறகு மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும்.

கலவை சற்று கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து சிறிது தளர வைத்துக் கொள்ளவும். கொட்டும் நிலை ஆக இருக்க வேண்டும்.

பேப்பர் கேஸ்களில் பாதியளவு ஊற்றி 160 டிகிரி C அளவில் சூடுபடுத்தப்பட்ட காஸ் அவனில் வைத்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
Previous Post
Next Post

0 Comments: