வெள்ளி, 25 அக்டோபர், 2024

பால் பேடா எப்படி?

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

பால் பேடா எப்படி? 


தேவையான பொருட்கள் :

கெட்டியான பால் - 200 கிராம்
பால் பவுடர் - 3/4 கப்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப் பூ - 3-4


செய்முறை:

அடுப்பில் கடாயை வெச்சு மிதமான சூட்டில் நெய் சேர்த்துக்கோங்க.. அது கூட பால் பவுடர், கெட்டியான பாலை சேர்த்துக்கோங்க.... 2-3 நிமிசம் நல்லா கிளறிவிடுங்க.. அடி பிடிக்காம கவனமா இருக்கணும்..

அது கூட ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க.... (உங்களுக்கு பிடிச்சா ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க). நல்லா கிளறி விட்டு பாத்திரத்தில பக்கவாட்டில ஒட்டாம பார்த்துக்கோங்க. பால் கெட்டியாகி கோவா போல திரண்டு வரும். சீக்கிரமா அடிபிடிச்சிடும். அதனால கைவிடாம கிண்டிகிட்டே இருங்க. முடிஞ்ச அளவுக்கு அடி கனமான Non - Stick கடாய் பயன்படுத்துங்க. சரியான பதம் வந்ததும் அடுப்பை அனைச்சுட்டு 5-10 நிமிசம் நல்லா ஆற வெச்சுடுங்க...

இந்த நேரத்துல இது கூட குங்குமப் பூ சேர்த்துக்கோங்க.... 

உங்களோட உள்ளங்கைல வெச்சு சின்ன சின்ன பந்து உருண்டைகளா உருட்டிட்டு, அப்படியே பேடா வடிவத்துல தட்டிக்கோங்க.

நீங்க விருப்பபட்டால் பேடா நடுவில காஞ்ச திராட்சை வெச்சுக்கலாம்...

அப்படியே ஒரு தட்டுல நீங்க செஞ்ச பேடாவ வரிசையா அடிக்கி வெச்சி பாருங்க... இதையெல்லாம் நீங்களா செஞ்சீங்கன்னு ஆச்சர்யமா இருக்கும்.
Previous Post
Next Post

0 Comments: