வெள்ளி, 25 அக்டோபர், 2024

கோதுமை குழி பணியாரம்...!

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

கோதுமை குழி பணியாரம்...!

தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு - கால் கிலோ
2. இட்லி மாவு - கால் கப்
3. ரவை - 1 டேபிள் ஸ்பூன்
4. முட்டை - 1
5. தேங்காய் துருவல் - கால் கப்
6. முந்திரி - 3(பொடியாக்கியது)
7. உப்பு - தேவைக்கேற்ப
8. வெல்லம் - 300 கிராம் (பொடியாக்கியது)
9. ஏலக்காய் - 3(பொடியாக்கியது)
10. எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

1. வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

2. கோதுமை மாவில் இட்லி மாவு, ரவை, முட்டை, பொடியாக்கிய முந்திரி, உப்பு, ஏலக்காய் பொடி, வடிகட்டிய வெல்லம் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

3. கலவை கெட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பின்பு, குழிபணியார சட்டியை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு பணியாரமாக சுட்டெடுக்கலாம்.

5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Previous Post
Next Post

0 Comments: