புதன், 2 அக்டோபர், 2024

தினமும் காலையில்வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால்..?

தினமும் காலையில்
வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால்..?


ஒரு அற்புதமான மூலிகை தான் அருகம்புல்.

அருகம்புல் சாறு

எப்படி எடுத்து கொள்ளலாம்?

அருகம்புல்லை தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின்*

தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்*

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன்*

துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.

மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


நன்மைகள்


உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு

அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது.



ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன்,

ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.



ஞாபக சத்தியைத் தூண்ட*

அருகம்புல் சிறந்த மருந்தாகும்.

ஞாபக மறதியைப் போக்கி

அன்றாட வாழ்வில்
மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.



அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து

தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால்

நினைவாற்றல் அதிகரிக்கும்.



அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும்

சம அளவு எடுத்துக் கொண்டு

அதை உடலில் தேய்த்து

அரைமணி நேரம் ஊறவிடவும்.

பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால்

உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

 

வாயுத்தொல்லை உள்ளவர்கள்

அருகம்புல் சாறு அருந்தி வர,

அதிலிருந்து விடுபடலாம்.

உடல் சூட்டையும் இது தணிக்கிறது.



அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது.

இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.



குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.



நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.

இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது
இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
Previous Post
Next Post

0 Comments: