நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.
ஆப்பிள் தேங்காய் பர்ஃபி
தேவைப்படும் பொருட்கள்
தோல் அகற்றிய சீவிய ஆப்பிள், குளிர்ந்த துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ, நுணுக்கிய ஏலக்காய், உடைத்த பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா.
செய்முறை
கடாயில் சீவிய ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியற்றை சேர்த்து மெதுவான சூட்டில் நன்கு வதக்கவும்.
அனைத்தும் ஒன்றாக சுண்டி வதங்கிய பின்பு அதில் ஏலக்காய் பொடி, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா போன்றவற்றை சேர்க்கவும்.
இந்த கலவை மெதுவான நீர் தன்மையின்றி வருமளவிற்கு நன்கு கலக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவையை 3-4 இன்ச் உள்ள நெய் பரப்பிய சதுர தட்டில் அல்லது பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் உலரவைத்து அதனை தட்டைக்கரண்டி கொண்டு நன்கு அமுக்கி பரப்பிவிடவும். இப்போது பர்ஃபி தயார்.
பின்பு பர்ஃபியை ஒரு இன்ச் சதுர வடிவமாக வெட்டவும். அதனை இரண்டு மணி நேரம் உலரவைத்தால் அதன் வடிவம் மாறாமல் கெட்டியான பதத்திற்கு வரும்.
இப்போது சதுரமாக நறுக்கிய பர்ஃபியை சதுர வடிவ பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.
0 Comments: