செவ்வாய், 26 நவம்பர், 2024

அழகர்கோவில் தீர்த்தக்கரை ஸ்ரீராக்காயி அம்மன்

அழகர்கோவில் தீர்த்தக்கரை ஸ்ரீராக்காயி அம்மன்


 ஓங்கி உயர்ந்த மரங்கள் தாங்கி படந்த வனம்
உன்னாட்சி தாயே ராக்காயி அம்மன் தாயே
மதுரை அழகர்கோவில் தலை தாங்கிய பைரவித் தாயே உன் அருளாட்சி
ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி பாதசேவை காண ஓடுது புன்னியமான தீர்த்தம் தங்க ஆறு வந்து பாயுது 
மயில் தோகை விரித்தாடும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் 
மந்திகளும் குதித்தாடும்
சிம்ம வாகனத்தில் கானகம் அம்மா உன் ஊர்கோலம் தினம் காணும்
கோபுரம் தாங்கிய உன் கோவில் அழகு
கொத்துமலர்கள் பூக்கும் உன் தோட்டமழகு
குலமகள்கள் தவமிருக்கும் உன் வாசல் அழகு
கோல முகத்தழகி அருட்கடைவிழியழகு கொஞ்சம் பார்த்திடம்மா வினைகள் வழிவிட்டு விலகும்

தூவானம் பன்னீர் தூவி சாரல் அடித்திடும்
பூவாத பூக்களும்
பூத்து தேனை சொரிந்திடும்
கூவாத குயில்கூட உன் பெயரை பாடிடும்
பதினெட்டாம்படியன் காடும் அதிர்ந்திடும்
ராக்காயி அம்மன் ஆடும் ஆட்டம் வானம் இடி முழங்கிடும் ஸ்ரீபதினெட்டாம்படிகருப்பசாமி என்றும் காவல் நின்றிடுவார்

🙏🌹நல்லதே நடக்கும்🙏🌹

எங்கள் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பசாமி 🌹🌹

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில்

தினம் ஒரு திருத்தலம்

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில்

*அமைவிடம்:*
அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில், திருவாலந்துறை, பெரம்பலூர் :

*திருக்கோவில் வரலாறு*
 திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் ஊடாகச் சென்று பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இதற்கு ஸ்வேதா நதி, நீவா நதி என்ற பெயர்களும் உண்டு. நீவா நதி என்பது வசிஷ்டர் அழைத்த பெயராகும்.

அர்ச்சுனனின் பாணத்தால் இந்த நதி உருவானதாக புராணக்கதை ஒன்றுண்டு. தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தீர்த்த மலை அடிவாரத்துக்கு வந்தபோது சிவபூஜை செய்ய ஆயத்தமானான். அப்போது பூஜைக்குத் தண்ணீர் தேவைப்படவே, கண்ணனின் ஆலோசனைப்படி தனது பிறைவடிவ பாணத்தால் மலையைத் துளைத்தான். அப்போது கங்கையில் பத்திலோர் பகுதி கொண்ட நீர் மலையிலிருந்து பெருகி ஓடியது. அதைத் தொடர்ந்து நடந்த சிவபூஜையின் முடிவில், சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி தந்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ச்சுனன் காலத்திலேயே தோன்றிய நதியென்பதால் இது 5000 வருட வரலாறுடையதென சொல்லப்படுகிறது.

இத்தகைய சிறப்புடைய வெள்ளாற்றின் கரையில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சப்த துறைகள் எனப்படும் காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருவரத்துறை, முடவன்துறை என்னும் ஏழு துறைகள் உள்ளன. திருவரத்துறை நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர் இந்த ஏழு துறைகளையும் பற்றி பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

*சிறப்பம்சங்கள் :*

 திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :


திருச்சிற்றம்பலம்
அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்

**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻
**சிவமே தவம் **
**தவமே சிவம் **

அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே 

அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே 

உம் பேரருளோடு
உம் திருவடியை பணிகிறேன்

🌼எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

🌼பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

🌼கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

🌼சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

🌼ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

🌼பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

🌼எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

🌼காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

🌼 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.

🌼எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....

🌼அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன் தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது

**ஈசன் அடி தேடி பின்பற்றி**
பழமையான சிவனார் ஆலயங்களில் 

மாதம் ஒருமுறை உழவாரப்பணி,

திருவாசகமுற்றோதுதல், 

கோபூசை, 

மண்ணுக்கேற்ற மரக்கன்று நடுதல்,  

திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா, 

மற்றும்

சிறப்புவாய்ந்த நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது
அனைவரும் வருக சிவனருள் பெறுக

🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏

🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏

சஷ்டி தனிச்சிறப்பு வாய்ந்த நாளாகும்.

மகா கந்தசஷ்டியை தொடர்ந்து வரும் சஷ்டி தனிச்சிறப்பு வாய்ந்த நாளாகும். 


இது குரு பகவானுக்கும், முருகப் பெருமானுக்கும் உரிய வியாழக்கிழமையில் வருவது கூடுதல் விசேஷமானதாகும். 

இன்று நவம்பர் 21- 1-2024, கார்த்திகை 6, குரோதி வருடம்,வியாழக்கிழமை.

இன்றைய சிறப்பு :
சஷ்டி விரதம், முகூர்த்த நாள்.

*இன்றைய வழிபாடு :*

முருகன் கோயில்களில் தீபமேற்றி, முருகப்பெருமானுக்கு விரதமிருந்து, செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல். 

சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய விரத நாள். 

தேய்பிறை சஷ்டி, வளர்பிறை சஷ்டி என எந்த சஷ்டி திதியிலும் விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். 

மற்ற மாதங்களில் வரும் சஷ்டி விரதத்தை விட மகாகந்த சஷ்டிக்கு பிறகு, கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி திதி மிகவும் விசேஷமானதாகும். 

இருளை நீக்கி, எங்கும் ஒளியை பரப்பும் மாதமான கார்த்திகை மாதமே முருகப் பெருமானுக்குரிய மாதம் தான். 

கார்த்திகை மாதம் தனிச்சிறப்பான மாதம் என்றால், கார்த்திகையில் வரும் சஷ்டி திதி அதை விட சிறப்பு வாய்ந்ததாகும்.

வருடம் முழுவதும் வரும் சஷ்டி திதியில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். 

அப்படி வருடம் முழுவதும் சஷ்டி திதியில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் ஒரே ஒரு சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டால் வருடம் முழுவதிலும் வரும் சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைத்து விடும். 

அது மட்டுமல்ல, என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஏற்ற முறையில் முருகனை வழிபட்டால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும். 

அதுவும் இந்த ஆண்டு கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டி முருகப் பெருமானுக்குரிய வியாழக்கிழமையில் நவம்பர் 21ம் தேதி வருவது இன்னும் கூடுதல் விசேஷமாகும். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியில் விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று வழிபடுவோம்.

 அதே போல் கார்த்திகை சஷ்டியில் எந்த பிரச்சனைக்கு எப்படி முருகனை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குழந்தை வரம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் சஷ்டி அன்று காலையில் முருகப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பழம், தேன், வெற்றிலை பாக்கு ஆகிய ஐந்து பொருட்களை வாங்கிக் கொடுப்பது சிறப்பு. ஒரு லிட்டர் பால், ஒரு லிட்டர் தயிர் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

 பழ வகைகளில் 4 ஆப்பிள், 3 மாதுளை, 2 கொய்யா ஆகியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். தேன், குறைந்தபட்சம் அரை லிட்டராவது வாங்கிக் கொடுக்க வேண்டும். 

அதோடு 11 வெற்றிலை மற்றும் கொட்டை பாக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக நோய் பாடாய் படுத்துகிறது, வீட்டில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், வீட்டில் உள்ள வியாதிகள் எல்லாம் தீர வேண்டும் என்பவர்கள் சஷ்டி அன்று கோவிலுக்கு சென்று 3 பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். 

ஒரு லிட்டர் பால், ஒரு லிட்டர் தயிர், அரை லிட்டர் தேன் ஆகிய மூன்று பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சொந்த வீடு கட்ட வேண்டும், வாங்க வேண்டும் என முயற்சி செய்தும் நடக்கவில்லை, வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்கே சம்பாதிக்கும் பணம் அனைத்தும் போய் விடுகிறது, வீட்டுக் கடனை கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்கிறவர்கள் நாளை வரும் சஷ்டியில் 2 லிட்டர் பால், ஒரு லிட்டர் தயிர் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன், முருகப் பெருமான் காப்பாற்றுவார் என நம்பி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். 

குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிக குறைவாக மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். 

முடியும் என்கிறவர்கள் முழு நேரமும் உபவாசமாக விரதம் இருக்கலாம். 

ஆனால் சஷ்டி விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் கண்டிப்பாக வெங்காயம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. 

முருகனை மனதார வேண்டி, உண்மையான பக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். 

மாலை 6 மணிக்கு பிறகு கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டு, எளிமையான உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதி

தினம் ஒரு திருத்தலம்

வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதி


பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். 

*முதல் தல வரலாறு*

வேண்டிய வரங்களை அளிக்கும் செங்கன்னூர் பகவதி
பார்வதி தேவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன், பெரும் வேள்வி ஒன்றை நடத்தத் தொடங்கினான். தாட்சாயிணி அந்த வேள்விக்கு அழைத்துச் செல்லும்படி சிவனிடம் வேண்டினார். அழைப்பில்லாமல் சென்றால் அவமானம் நேரிடும் என்று சிவன் அறிவுரை சொன்னார். ஆனால், தாட்சாயிணி தனியாக அந்த வேள்விக்குச் சென்று, தட்சனால் அவ மதிக்கப்பட்ட நிலையில் வேள்வி அழியும்படி சபித்து விட்டு, வேள்வித் தீயில் குதித்து விட்டாள்.
அதனை அறிந்த சிவன், வேள்வியை அழித்த பின்னர் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு, ஊழித்தாண்டவம் ஆடினார். அவரை அமைதிப்படுத்த நினைத்த மகாவிஷ்ணு, சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

*இரண்டாவது தல வரலாறு:-*
அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.

*மூன்றாவது தல வரலாறு:-* பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான். செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.

இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. 

பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.

வழிபாட்டு காலம்
காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

*திருப்பூத்து*
அம்மனுக்கு மாதவிடாய் ஏற்படும், மூன்று நாட்களில் அம்மனின் சன்னிதி அடைக்கப்பட்டு, அம்மனின் உற்சவ சிலை வடக்கு மூலையில் தனியாக ஒரு அறையில் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வை ‘திருப்பூத்து’ என்றழைக்கின்றனர். மூன்று நாட் களுக்குப் பிறகு, நான்காவது நாளில் அம்மன் சிலை ‘ஆராட்டு’ செய்யப்பெற்று, மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்படுகிறது. இவ்விழாவினை ‘திருப்பூத்தாராட்டு விழா’ என்கின்றனர். இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது.

அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
கோவில் அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
ஆங்கிலேய அதிகாரி அளித்த தங்க வளையல்கள்
செங்கன்னூர் பகவதி கோவில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த திருவிதாங்கூர் பகுதி ஆங்கிலேய அதிகாரி மன்றோ, கோவிலில் திருப்பூத்து ஆராட்டு விழாவிற்குச் செய்யப்பட்ட செலவைக் குறைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அதன் பிறகு, ஆடி மாதத்தில் பகவதியம்மனுக்கு திருப்பூத்து உண்டான அதே வேளையில், மன்றோவின் மனைவிக்கும் ரத்தப் போக்கு ஏற்பட்டது. பல மருத்துவர்கள் முயன்றும், அவருக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கை நிறுத்த முடியவில்லை. கவலையடைந்த மன்றோ, தனது கீழ் அதிகாரி களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஜோதிடர் ஒருவரது ஆலோசனைகளை கேட்கலாம் என்றனர். அதன்படி அங்கு வந்த ஜோதிடர், நடந்தவற்றை கேட்டறிந்து, சம்பவத்துக்கு பின்னர் உள்ள அடிப்படையை ஜோதிட கணக்குகள் மூலம் அறிந்து கொண்டார். 

திருப்பூத்து ஆராட்டு செலவு களைக் குறைக்கச் சொன்னதால், மன்றோவின் மனைவிக்கு நிற்காத ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். உடனே மன்றோ, விழாவிற்குத் தேவையான செலவுகளை விருப்பம் போல் செய்யலாம் என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரத்தப் போக்கு சரியானது. அதனைத் தொடர்ந்து, செங்கன்னூர் பகவதியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இரண்டு தங்க வளையல்களை வழங்கி, பக்தியுடன் மன்றோ வணங்கி விட்டு சென்றார்.

 இன்றும், திருப்பூத்து ஆராட்டு விழாவில் அந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு வருகின்றன.

கண்ணனும் புல்லாங்குழலும்!

கண்ணனும் புல்லாங்குழலும்!


கண்ணன் என்கிற பெயரைக் கேட்ட உடனே நம் எல்லோருக்கும், மயிற்பீலியும் புல்லாங்குழலும்தான் ஞாபகத்திற்கு வரும். சிரசில் மயிற்பீலியோடும், இடுப்பில் புல்லாங்குழலோடும் இல்லாத கண்ணனைப் பார்ப்பதே மிக மிக அபூர்வமாகும்.

துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதாரம் செய்தார். அவர் யமுனா நதியில் சகாக்களுடன் குளிப்பது, நதி தீரத்தில் அடிக்கடி விளையாடுவது, உணவு உண்பது, ஆசுவாசப்படுத்திக்கொள்வது போன்ற எல்லாவற்றையுமே நிகழ்த்தி வந்தார்.

கண்ணனிடம் புல்லாங்குழலைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஒரே புல்லாங்குழலைத்தான் எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்தியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம்...உண்மை அதுவல்ல. ஸ்ரீ கிருஷ்ண பகவான் எட்டு விதமான புல்லாங்குழல்களை வைத்திருந்தார். ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி பெயர் உண்டு.

அவரிடம் இருந்த புல்லாங்குழல்களிலேயே மிகவும் சிறியது ‘வேணு’ என்கிற பெயர் கொண்ட புல்லாங்குழல்தான். இது ஆறு அங்குல நீளமும், ஆறு துளைகளையும் கொண்டது.

இரண்டாவதாக, முரளி என்னும் புல்லாங்குழல். இது பதினெட்டு அங்குல நீளத்தையும், ஐந்து துளைகளையும் கொண்டது.

மூன்றாவதாக, வம்சி என்னும் பெயர் கொண்ட புல்லாங்குழல். இது பதினைந்து அங்குல நீளத்தையும், ஒன்பது துளைகளையும் கொண்டது.

வம்சி என்னும் புல்லாங்குழலே சற்று நீளமாகவும், நிறைய ஆபரண வேலைப்பாடுகளுடனும் இருந்தால், அதற்கு மகாநந்தா அல்லது சம்மோஹினி என்று பெயர். இதன் ஒரு பக்கத்தில் வளைந்து கொக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்படும். இது எதற்கு என்றால் தனது பக்தர்களை அந்த கொக்கியின் மூலம் தன் வசம் இழுப்பதற்காக அவ்வாறு வைத்திருந்தாராம்.

இதே மகாநந்தா புல்லாங்குழல் சற்று நீளமாக இருந்தால் அதற்குப் பெயர் ஆகார்ஷினி. இந்தப் புழங்குழல் முழுவதும் தங்கத்தாலேயே உருவாக்கப்பட்டிருந்தது.

சற்று நீளமான ஆகர்ஷினி புல்லாங்குழலுக்கு ஆனந்தினி என்று பெயர். இந்தக் குழலை அவர் இசைத்தால் இடையர் குலமே, அதாவது கோபர்கள், கோபியர்கள் அனைவருமே போட்டது போட்டபடி குழல் நாதம் வரும் திசையை நோக்கி சென்று விடுவார்களாம்.

ஏழாவது மற்றும் எட்டாவது புல்லாங்குழல்கள் ஸ்ரீ ராதைக்காகவே பிரத்தியேகமாக இசைக்கப்படுமாம். ஒன்றின் பெயர், மதனஜங்க்ருதி, மற்றொன்றின் பெயர் சரளா. இந்த சரளாவை இசைத்தால் ஸ்ரீ ராதையை லீலைகள் புரிய அழைப்பு விடுப்பதாக அர்த்தமாம்.

*சரி, இந்தப் புல்லாங்குழலை எதற்காக கண்ணன் எப்பொழுதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார் தெரியுமா?*

ஒரு நாள் கண்ணன் உணவு உண்ட பின் தனது சகாக்களுடன் பேசிக்கொண்டே ஒரு வனத்தில் படுத்து இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மூங்கில் மரமானது வளைந்து தரையைத் தொடும் அளவிற்கு வணங்குவது போல் அருகில் அமைந்திருந்தது. அந்த மூங்கில் மரத்தை பார்த்தவுடன் கண்ணனுக்கு, ‘ஆஹா இது எத்தனை ஒரு பணிவான மரமாக இருக்கிறது. தலை வணங்கி நிற்கிறதே’ என்று மனதுக்குள் மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அந்த மரத்திடம், “மரமே உன்னை நான் உபயோகப்படுத்திக் கொள்ளட்டுமா?” என்று கேட்டார்.

கண்ணன் அவ்வாறு கேட்டதும், அந்த மரமும், “கண்ணா உங்களிடம் சரணாகதி அடைந்து விட்டேன். உங்களுக்கு நான் உபயோகப்படுவேன் என்றால் அதைவிட என்ன பாக்கியம் இருக்க முடியும்? என்னை தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியது. கண்ணனும் அந்த மூங்கிலை எடுத்து உடைத்தார். துளைகளை உண்டாக்கினார். அழகான ஒரு புல்லாங்குழலைச் செய்து கொண்டார்.


“மரமே உன்னை நான் உடைத்தேன். துளைகள் இட்டேன். உனக்கு வலிக்கிறதா? கூறு” என்றார்.

“பகவானே நீங்கள் அருகில் இருக்கும்பொழுது எனக்கு எந்த வலியுமே ஏற்படவில்லை. நீங்கள் தாராளமாக எப்படி வேண்டுமானாலும் என்னை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றது.

அதைக்கேட்டு பகவான் சிரித்துக் கொண்டார். புல்லாங்குழலை ஆசையாக எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டார். ஆம். ஸ்ரீ கிருஷ்ண பகவானை முழுவதுமாக நம்பி, சரணாகதி அடைந்து விட்டால், வாழ்வில் சோதனைகள் நமக்கு அதிக துக்கத்தைத் தராது. 

அதுவுமல்லாது, அவர் நம்மை எப்பொழுதுமே தனது கூடவே வைத்திருப்பார் என்று புரிகிறது அல்லவா?

*ஜய் ராதே க்ருஷ்ணா!!!*

சாஸ்திர_விதிகளில் சில_துளிகள்

சாஸ்திர_விதிகளில் சில_துளிகள்


1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

.5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. 
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ... 23,இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.

24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

25 தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

26 முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

27 உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

28 அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

29 ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

30 அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் பாண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு பெருமைக்கு உரிய தலம். 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார்


பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.

காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலன், கண்ணகியை மணந்து இன்ப மாக வாழ்ந்தான். இதற்கிடையே ஆடலரசி மாதவி மேல் மோகம் கொண்டு அங்கேயே தங்கினான். இதன் காரணமாக கோவலன், செல்வத்தை எல்லாம் இழந்தான். அப்போது ஒருதடவை மாதவி இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடினாள்.

இதன் உட்பொருளை தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை பிரிந்து, கண்ணகியிடம் மீண்டான். அதன் பிறகு கோவலன் வணிகம் செய்யும் பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான்.

அங்கு கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி, கோவலன் மதுரை கடைவீதிக்கு சென்றான். அப்போது பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன், கோவ லன் மேல் பொய்ப் பழி சுமத்தினான். அதனை மன்னன் நம்ப, கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இந்த நிலையில் கணவன் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கண்ணகி நேராக அரண்மனைக்கு சென்றாள். மன்னனிடம் நியாயம் கேட்டாள். அப்போது, “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான். அதற்கு கண்ணகி “என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான். இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.

இதனை கண்டு அதிர்ந்த பாண்டிய மன்னன் “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான். அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானிடம் சென்றது. அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.

இதனை கேட்ட பாண்டிய நெடுஞ்செழியன், ‘எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம். என்னை பூஜித்து மானிடர்கள் வழிபடட்டும். நான் அவர்களை காத்து அருளும் பொருட்டு, எனக்கு தீய சக்திகளை வெல்லும் வரம், தீயவர்களை கொல்லும் வரம், நம்பியவர்களுக்கு அருள்புரியும் வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசி கூறினார். அதன் பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார்.

இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள்- பெரியசாமி தம் பதியர் கரூரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் தங்கினர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன். அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், அன்னாரின் குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப் பேன்” என்று கூறி மறைந்தார்.

அதன் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி வள்ளியம்மாள் கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, அங்கே மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு சுவாமி சிலை சம்மணம் இட்ட தவக்கோலத்தில் கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து வைத்து கும்பிடத் தொடங்கினார் கள். அப்போது பாண்டி முனீஸ்வரர் ஒருதடவை நேரில் காட்சி தந்து, ‘நான் வெயிலில் காய்கிறேன். மழையில் நனைகிறேன்’ என்று கூறினார்.

அடுத்த நாளே பனை ஓலையால் குடிசை அமைத்து, அங்கு பாண்டி முனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார். முனிவர் வேடத்தில் சிவன் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.

இங்கு உலகின் பிற காவல் தெய்வம் போல அல்லாமல், முனீசுவரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.

இவர் குழந்தை இல்லாதோருக்கு மழலை வரம் தருவது முதல் பேய்& பிசாசு பிடித்தவருக்கு நிவர்த்தி தருதல் வரை, அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். சிறப்புகள்: இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.

இப்போதும் நிறைய பக்தர்கள் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் முதியவர் வேடத்தில் தான் பாண்டி முனீஸ்வரர் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். துயரங்களோடு வரும் உண் மையான பக்தர்களுக்கு வெறும் சிலையாக மட்டும் இன்றி நேரில் வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று மன பாரங்களை கொட்டுங்கள். உங்கள் துயரங்களில் இருந்து நிச்சயம் பாண்டி முனீஸ்வரர் காப்பார்.

பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது. பூஜையின்போது எப்போதும் கூட்டம் அலைமோதும். பாண்டி முனீஸ் வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன. பாண்டி முனீஸ்வரர் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி முனீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார்கள். கருணை உள்ளம் கொண்ட அவர் மழலைச்செல்வம் கொடுக்கிறார். பல்வேறு வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் கோவிலில் காணிக்கைகளாக செலுத்திய மணி அங்கு குவிந்து கிடப்பதை காணலாம்.✍🏼🌹

கிருத்திகா (கார்த்திகை) முதல்சோமவார சிறப்பு தரிசனம் !

கிருத்திகா (கார்த்திகை) முதல்சோமவார சிறப்பு தரிசனம் !


*பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர் அற்புத ஆலயம் !*

"நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர்...!"

பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம் !

அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்) பிறகு மப்பேடு’ என்று மருவியதாகச் சொல்வார்கள்...!

வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்...!

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறது புராணம்...!

ஈசனோடு இங்கு வந்த சக்தி, நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்று திருநாமம் கொண்டாளாம்...!

சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில் - கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள்...!

இந்த அம்பிகையை வணங்கி வேண்டிக்கொண்டால், பேச்சில் வல்லமை தருவாள். 

சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை...!

இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலமாக உள்ளது. 

கலைகளின் தேவியான கலைமகளுக்கும், ஆற்றலில் சிறந்தவரான அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் மூலம்...!

இந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்க, ஆற்றலும் கலையும் பெருகும் என்கிறார்கள் பெரியோர்கள்...!

கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு..!

பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார் 
20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு...!!

இந்த கார்த்திகை முதல்சோம வார மாலைப்பொழுதில் இந்த சிவனாரை தரிசித்து அருள்பெறுவோம் !

"தென்னாடடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி"

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பில் விளைந்த ஆரமுதே..

பொய்ம்மையே பெருக்கிப்
பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்..

தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே..

இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே..!

ஓம் நமச்சிவாய ..!!"🚩

கருடபுராணம் - சில தகவல்கள்

கருடபுராணம் - சில தகவல்கள் !


இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது..

சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?

அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானது தான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப்பற்றிப் பார்ப்போம். 

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள்.

யார் அந்த முன்று நபர்கள்?
கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.
இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.

யார் இந்தக் கிங்கரர்கள்? இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன? கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.

அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக்கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.
செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் ய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.
உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.

இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள். தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.

அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல்மீது விழுந்து அழுத்துவார்கள். இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதைபதைத்து துடிக்குமாம்.

மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை. 

உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.
காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக்கூறுகிறார்கள்.

ஆவிகள் கருப்பு வெள்ளையாகத்தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில் ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள் காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.இதற்கு பல காலமாக ஆவிகளைப்பற்றிய எனது தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பல பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது.

பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது.

மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய் இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில் இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது. முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள் புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.
சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை என்றே நான் கருதுகிறேன். காரணம் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும் மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.

முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்எப்படி வந்தமைகிறது என்பதைக்கருட புராணம் அழகாகக் கூறுகிறது. 

இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
நான்காம் நாளில் வயிறும்
ஐந்தாம் நாளில் உந்தியும்
ஆறாம் நாளில் பிருஷ்டமும்
ஏழாம் நாளில் குய்யமும்
எட்டாம் நாளில் தொடைகளும்
ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.
பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் கழ்த்தப்பட்ட எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.

மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்பற்றியோ துளி கூடக் கவலைப் படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.

அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலைஅமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.
அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.

மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்தநகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.

இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம். இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.

அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.

ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.

புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.
பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.

மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக்ணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள். 

இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.

நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரண தேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.🌹

பக்தனுக்கு பணிவிடைபுரிய மகளாக வந்த அம்பிகை !-

பக்தனுக்கு பணிவிடைபுரிய மகளாக வந்த அம்பிகை !


கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை ஒரு மனதோடு ஜெபித்ததால் , அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள்.
-
 அம்பிகையின் அருளால் அவர், கவிஞராக மாறினார் இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர். பல ஆண்டுகளுக்கு பின் மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார். 
-
சிறிது தூரம் சென்ற பிறகு வழியில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கினார். அப்போது, அவர் மகள், மீனாட்சி, கையில் சில பாத்திரங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், நீ ஏன் என் பின்னால் வந்தாய்... காசி என்ன பக்கத்திலா இருக்கு... போயிட்டு உடனே திரும்ப எப்படியும் ஆறு மாசம் ஆகுமே... என்றார். மகளோ, உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்... என்றாள் அழுத்தமாய்!
-
வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் கவிராஜர். போகும் வழியெல்லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவியாக இருந்தாள் மீனாட்சி. 
பல மாதங்கள் பயணப்பட்டு இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடுவதும், விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின. 
-
ஒருநாள், இருவரும் கடை வீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி. கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்ன செய்வது என திகைத்த போது, அங்கே தமிழ் பேசும் ஒருவர் வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளையல் வாங்கிக் கொடுத்து மறைந்தார். 
-
இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். ஊருக்கு பக்கத்தில் , முதலில் தங்கிய மரத்தடியை அடைந்த போது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார் கவிராஜர். அப்போது, அப்பா... நீங்க மெல்ல வாங்க... நான் முன்னாடி போறேன்... என்று சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி.சிறிது நேரம் கழித்து கிராஜயர் வீட்டிற்கு வந்தார். 
-

கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக்கையாயிட்டா... என்றாள். இதைக் கேட்டதும் அதிர்ந்த கவிராஜர், என்ன சொல்ற... மீனாட்சி என் கூட காசிக்கு வந்து, அப்பப்ப சமைச்சு போட்டா... வளையல் கூட வாங்கினாளே... என்றார் திகைப்போடு 
-
தங்கையோ, என்னண்ணா சொல்றே... மீனாட்சி இங்க தானே இருக்கா..இதோ பார் என்று படுத்த படுக்கையாக கிடந்த மகளை காண்டினாள். 
-
கொஞ்ச நேரம் முன் ஒரு சுமங்கலி பெண் வந்து, நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டு போனாள்.இதோ அந்த வளையல் என்று காண்பித்தார்கள்.... 
-
. உண்மை புரிந்த கவிராஜருக்கு, மெய் சிலிர்த்தது.
தன்னோடு காசிவரை வந்தது அம்பிகைதான் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தார்
 கண்களில் கண்ணீர் வழிய, அம்பிகையை வணங்கினார். 
-
இவர் தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். 

தற்போது பிரபலமாகி வரும், வராஹி மாலை எனும் மந்திர துதி நூலை, அருளியவர். பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது.

அரசமரம் தெய்வீக மரம்

அரசமரம் தெய்வீக மரம்


அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்தி வடிவமான அரச மரத்திற்கு பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும்.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. 

குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும்.

சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது.

நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :

திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்யோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் கிடைக்கும்.

புதன்கிழமை அன்று அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.

வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கிய பின்பு, அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளிக்கிழமை லட்சுமியை வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் உண்டாகும்.

சனிக்கிழமை அன்று வலம் வருபவர்களுக்கு கஷ்டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரசமரத்தைச் சுற்றுவது கூடாது. 

அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்துவரும் நாளில் அரசமரத்தை வலம்வருவது இன்னும் சிறப்பு. மனோபலம் அதிகரிக்கும்.

அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில்.

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே..


அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில்.

இக்கோவில் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசயமாக இம் மலைமீது காகங்கள் பறப்பதில்லை. 

இம்மலையில் கோவில் கொண்டுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் சிலமணித்துளிகளிலேயே அந்த அபிஷேக பால் தயிராக மாறுவது பக்தர்கள் அனைவரையும் அதிசயிக்க வைப்பதாக இருக்கிறது.

 இத்தல முருகனுக்கு பூஜையின் போது மலர்கள் நைவேத்யம் தீபாராதனை பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது மேலும் சிறப்பாகும்.

 பொதுவாக சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் செய்வது வழங்கம். முருகன் சிவனிலிருந்து தோன்றியதால் இவர் சிவ அம்சமாகிறார். எனவே இவருக்கும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. 

மேலும் இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.

ரத்னகிரி.

திருமணிக்குன்றம்.

வேலூர் மாவட்டம்.

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புப் பதிவு...

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புப் பதிவு...


*சிவனின் அருளை பெற... சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள்...!!*

*கார்த்திகை மாத சோம வாரம்... சங்காபிஷேகம்..!!*

🙏 சோம வாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாத சோம வாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதால் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்" நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

🙏 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர். எனவே திங்கட்கிழமையில் அருகில் இருக்கும் சிவத்தலங்களில் சிவபெருமானையும், உமையாளையும் வணங்கி சோம வார தினத்தில் இறைவனின் அருளை பெறுவோம்.

🙏 சிவபெருமான் அபிஷேகப்பிரியர். எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும். சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கைகூடும்.

🙏 கார்த்திகை சோம வார தினத்தில் சிவனையும், விஷ்ணுவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

*சோம வார விரதம் இருக்கும்போது செய்ய வேண்டியவை :*

🙏 சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவ தலங்களை தரிசிப்பது நல்லது.

🙏 சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது.

🙏 சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.

🙏 சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது.

🙏 அன்னதான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது நன்று.

*சோம வார விரத பலன்கள் :*

🙏 திருமணம் கைகூடும்.

🙏 நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

🙏 கணவன், மனைவி ஒற்றுமை கூடும்.

🙏 பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

🙏 குழந்தை பாக்கியம் கிட்டும்.

🙏 ஆயுள் விருத்தி அடையும்.

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துக்கொண்டு சிவனின் அருளை பெறுங்கள்..!!

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள்

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள் 


கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு நடைபெறும் சங்காபிஷேகம்... 

கார்த்திகை மாத சோம வாரம் சங்காபிஷேகம்

🕉️ சோம வாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாத சோம வாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதால் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்" நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

🌟 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர். எனவே திங்கட்கிழமையில் அருகில் இருக்கும் சிவத்தலங்களில் சிவபெருமானையும், உமையாளையும் வணங்கி சோம வார தினத்தில் இறைவனின் அருளை பெறுவோம்.

🌟 சிவபெருமான் அபிஷேகப்பிரியர்.

 எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும். சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கைகூடும்.

🌟 கார்த்திகை சோம வார தினத்தில் சிவனையும், விஷ்ணுவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

🕉️சோம வார விரதம் இருக்கும்போது செய்ய வேண்டியவை :

🌟 சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவ தலங்களை தரிசிப்பது நல்லது.

🌟 சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது.

🌟 சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.

🌟 சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது.

🌟 அன்னதான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது நன்று.

🕉️சோம வார விரத பலன்கள் :

🌟 திருமணம் கைகூடும்.

🌟 நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

🌟 கணவன், மனைவி ஒற்றுமை கூடும்.

🌟 பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

🌟 குழந்தை பாக்கியம் கிட்டும்.

🌟 ஆயுள் விருத்தி அடையும்.

🕉️கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துக்கொண்டு சிவனின் அருளை பெறுவோம் 

ஓம் நமசிவாய

கார்த்திகை மாதம் சிறப்புகள்

கார்த்திகை மாதம் சிறப்புகள்



🔥.🌨️ #கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

🔥.🕉️🔱 #கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

🔥. 🌞#விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

🔥.🙇🏽‍♂️ #கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

🔥.👣🌀 #விஷ்ணு_பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

🔥. 👣🪔#கார்த்திகை_மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

🔥. 🪔#கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

🔥. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

🔥. 🦚🐓#முருகப்_பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

🔥. 🪔🦚#கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

🔥. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

🔥 🌀🕉️ #கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

🔥. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

🔥.🪔 #கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

🔥. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

🔥. 🦚🐓#கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🔥. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

🔥. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

🔥. 🙏🏽🪔#கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

🔥. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

🔥 திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

🔥.🪔👣🌀 #கார்த்திகை_மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

🔥. 🌞🙏🏽#கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

🔥. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

🔥. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

🔥. 🌀👣#ஸ்ரீரங்கத்தில்_பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

🔥. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🔥. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

🔥. 📙#கார்த்திகை_புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

🔥. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

🔥. 🪔🪔🪔#தீப_திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

🔥. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.

🔥. 🪔🌀👣#கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

🔥. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

🔥. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

🔥. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

🔥. 🌚#கார்த்திகை_மாத_அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

🔥. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

🔥. 🕉️🔱#திருநெல்வேலி_நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

🔥. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!

🔥.🌀👣 #குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

🔥 கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.

🔥. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.

🔥.💃🌨️🪔 #கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.

🔥. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

🔥. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

🔥.🌨️ #கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.

🔥. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

🔥.🔔 #கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

🔥.🪔🕉️🔱#கார்த்திகை_மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன...

இடுக்கு பிள்ளையார் கோயில்

இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளே சென்று உள்ளீர்களா ? 

ஆலயத்தின் சிறப்பு ! 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழமையான இடுக்குப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. 

இந்த ஆலயத்தில், நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. 

பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து, தவழ்ந்து, 2-வது வாசலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். 

இவ்வாறு வந்து இடுக்குப்பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழா கொண்டாடும்.

கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழா கொண்டாடும். அது எந்த ஊர் தெரியுமா?


நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் தொல்லையை கடந்து யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான் கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கார்த்திகை சனி, ஞாயிறு என்றால் ஊரே அமளி துமளி தான்.

1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் நாம் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தபலவள்ளியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். தாயாரை பார்த்த உடன் விடுமுறைக்கு வரும் குழந்தை கடந்த வருடம் விடுமுறை முடிந்து கிளம்பிய நாள் முதல் இன்று வரை நடந்த விஷயங்களை தனக்கு நடந்த சுக, துக்கங்களை எல்லாம் ஒன்று விடாமல் அம்மாவிடம் கூறுவது போல் அமிர்தபலவள்ளித் தாயாரிடம் கூறத் தோன்றும். அம்பாளின் புன்னகை ததும்பும் முகம் என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வது போல் தோன்றும். பிரிய மனமில்லாமல் தாயாரை தரிசித்து உள்ளே சென்றால் பிரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், பிரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தி யோக கோலத்தில் வீற்றிருப்பதை காணலாம்.

எந்தக் குழந்தையுமே அம்மாவிடம் பேசும் அளவிற்கு தந்தையிடம் பேசுவது கிடையாது. இங்கும் அது போலத்தான் நினைக்கத் தோன்றும். நரசிம்மரை தரிசிக்கும் போதே என்னடா அங்க எல்லாம் ஒப்பிச்சிட்டு வந்துட்டியா என்று நம்மை பார்த்து நரசிம்மர் கேட்பது போன்ற உணர்வு தோன்றும். உட்கார்ந்திருக்கும் அழகு அதற்கும் மேல்.. பிரம்மாண்ட உருவம். பத்மாசனத்தில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்த கோலம்.  
மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள்  
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை  
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த  
அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே

விளக்கம்: சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும், கடிகை என்னும் பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன் என்று இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளது.

இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது.

 ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன்.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன்

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன்



மகாலட்சுமி தாயாரே தீப ஜோதியாக விளங்குபவள். வீடுகளை அழகாகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு மாலை நேரத்தில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் மகாலட்சுமி விஜயம் செய்வாள். நாளை கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. வீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். 

வீட்டினை சுத்தமாக வைத்திருந்து விளக்கேற்றி வழிபட்டால் நம் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

தீப திருநாளில் மட்டுமல்ல, தினசரியும் அகல் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் செல்வ வளம் பெருகும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

 இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும் தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம். தீபத்தில் முப்பெரும் தேவியரான மகாலட்சுமி, சரஸ்வதி தேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோர் உறைந்துள்ளனர்.

 எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் ஆறு மணிக்கு வீட்டின் முன் முகப்பில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். 

இப்படிச் செய்வதால் புண்ணியம் உண்டாகும். முன் வினைப் பாவம் விலகும்.

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலை வேளையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக் கூடியது.

 தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எதில் விளக்கு இருந்தாலும், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால்தான் விளக்கின் மகிமையே தனி. 

அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள பீடைகள் அகலும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும்.🪔

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம்


ஒவ்வொருவருடைய வாழ்விலும் இருளை நீக்கி ஒளியை பரப்பும் மங்களகரமான மாதம் கார்த்திகை மாதம் ஆகும். இந்த மாதம் கணபதி, சிவன், முருகன், அம்மன், ஐயப்பன் மற்றும் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான மாதம். 

கார்த்திகை சோமவாரம் மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை கார்த்திகை மாதத்தில் முக்கியமான நாட்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி தினத்தன்று நாகதோஷம் நிவர்த்தி செய்வதற்கு உகந்த நாள் என்பதால், இம்மாதத்தை தோஷங்கள் நீக்கும் மாதம் என்றும் என்பர்.

அதுபோல் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் கார்த்திகை நட்சத்திரம் நாளில், முருகன் கோவிலில் விசேஷ வழிபாடு மற்றும் அன்னதானம் நடக்கும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு தீராத நோயும் கூட தீரும் என்பது ஐதீகம்.

முற்பிறவியில் செய்த பாவம் நீங்க கார்த்திகை மாதம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை அன்று பெருமானை வழங்கினால் பாவம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

இம்மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் நன்மைகள் பல கிடைக்கும். அதுபோல் கார்த்திகை மாதத்தில் பிறருக்கு விளக்குகளை தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்

தினம் ஒரு திருத்தலம      

பக்தர்களின் நம்பிக்கை.. நினைத்த காரியம் நிறைவேற.. அம்பிகை வழிபாடு..

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்

கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான குறுங்காலீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். 

*அமைவிடம்:*

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு என்னும் ஊரில் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

*செல்லும் வழி:*

சென்னையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கோயம்பேடு அமைந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. 

*இக்கோவிலின் சிறப்புகள்:*

இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இத்தலத்தில் அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் தருவது சிறப்பு. 

தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருப்பது அபூர்வம். 

இக்கோவிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. 

பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர், சாஸ்தா, லட்சுமி, ஞானசரஸ்வதி, நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். 

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி பஞ்ச நிறத்தில் வித்தியாசமாக உள்ளது. இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. 

*திருவிழாக்கள்:*

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரத சப்தமி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

*பிரார்த்தனைகள்:*

இக்கோவிலின் வலப்புறம் உள்ள அம்பிகையை வணங்கினால், திருமணம் கைகூடும் என்பது இக்கோவிலில் வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வெள்ளி, 15 நவம்பர், 2024

கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்

கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்*



*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*

*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*

*விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*

*4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.*

*5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.*

*6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.*

*7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.*

*8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.*

*9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.*

Lord Murugar

*10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.*

*11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.*

*12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.*

*13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.*

*14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.*

*15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.*

*16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.*

*17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.*

*18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.*

*19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.*

*20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.*

*21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.*

*22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.*
*23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.*

*24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.*

*25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.*

*26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.*

*27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

Pournami viratham

*28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.*

*29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.*

*30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.*

*31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.*

*32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.*

*33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.*

*34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.*

*35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.*

*36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.*

*37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.*

*38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.*

*39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.*

*40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!*

*41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!*

*42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.*

*43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.*

*44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.*

*45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.*

*46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.*

*47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.*

*48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.*

*49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.*

*50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.*

*51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.