அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில்
*அமைவிடம்:*
அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில், திருவாலந்துறை, பெரம்பலூர் :
*திருக்கோவில் வரலாறு*
திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் ஊடாகச் சென்று பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இதற்கு ஸ்வேதா நதி, நீவா நதி என்ற பெயர்களும் உண்டு. நீவா நதி என்பது வசிஷ்டர் அழைத்த பெயராகும்.
அர்ச்சுனனின் பாணத்தால் இந்த நதி உருவானதாக புராணக்கதை ஒன்றுண்டு. தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தீர்த்த மலை அடிவாரத்துக்கு வந்தபோது சிவபூஜை செய்ய ஆயத்தமானான். அப்போது பூஜைக்குத் தண்ணீர் தேவைப்படவே, கண்ணனின் ஆலோசனைப்படி தனது பிறைவடிவ பாணத்தால் மலையைத் துளைத்தான். அப்போது கங்கையில் பத்திலோர் பகுதி கொண்ட நீர் மலையிலிருந்து பெருகி ஓடியது. அதைத் தொடர்ந்து நடந்த சிவபூஜையின் முடிவில், சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி தந்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ச்சுனன் காலத்திலேயே தோன்றிய நதியென்பதால் இது 5000 வருட வரலாறுடையதென சொல்லப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய வெள்ளாற்றின் கரையில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சப்த துறைகள் எனப்படும் காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருவரத்துறை, முடவன்துறை என்னும் ஏழு துறைகள் உள்ளன. திருவரத்துறை நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர் இந்த ஏழு துறைகளையும் பற்றி பத்து பாடல்கள் பாடியுள்ளார்.
*சிறப்பம்சங்கள் :*
திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.
0 Comments: