செவ்வாய், 26 நவம்பர், 2024

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம்


ஒவ்வொருவருடைய வாழ்விலும் இருளை நீக்கி ஒளியை பரப்பும் மங்களகரமான மாதம் கார்த்திகை மாதம் ஆகும். இந்த மாதம் கணபதி, சிவன், முருகன், அம்மன், ஐயப்பன் மற்றும் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான மாதம். 

கார்த்திகை சோமவாரம் மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை கார்த்திகை மாதத்தில் முக்கியமான நாட்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி தினத்தன்று நாகதோஷம் நிவர்த்தி செய்வதற்கு உகந்த நாள் என்பதால், இம்மாதத்தை தோஷங்கள் நீக்கும் மாதம் என்றும் என்பர்.

அதுபோல் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் கார்த்திகை நட்சத்திரம் நாளில், முருகன் கோவிலில் விசேஷ வழிபாடு மற்றும் அன்னதானம் நடக்கும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு தீராத நோயும் கூட தீரும் என்பது ஐதீகம்.

முற்பிறவியில் செய்த பாவம் நீங்க கார்த்திகை மாதம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை அன்று பெருமானை வழங்கினால் பாவம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

இம்மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் நன்மைகள் பல கிடைக்கும். அதுபோல் கார்த்திகை மாதத்தில் பிறருக்கு விளக்குகளை தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
Previous Post
Next Post

0 Comments: