சனி, 14 டிசம்பர், 2024

மொச்சை கருவாட்டு குழம்பு

மொச்சை கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்

மொச்சைப்பயறு - கால் கிலோ 
கருவாடு - கால் கிலோ
நறுக்கிய சிறிய வெங்காயம் - 15
நறுக்கிய தக்காளி - 3 
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியாத்தூள் - 3 ஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு
கடுகு - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

*வாட்சப் 🪀 கிச்சன்*

🪀மொச்சை கருவாட்டு குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் மொச்சைப்பயறை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். 

🪀நன்கு ஊறியதும், ஒரு குக்கரில் மொச்சைப்பயிறைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். 

🪀பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்கவும்.

🪀வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதில் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும்.

🪀குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் மொச்சைப்பயிறு, கருவாட்டை சேர்த்து 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான மொச்சை கருவாட்டு குழம்பு தயார்.....
Previous Post
Next Post

0 Comments: