♥ லட்சுமிஅம்மனும் உப்பும் ஒன்றேயாகும்.
♥ இதை பிற மதத்தினரும் நம்புகிறார்கள்.
♥ உப்பை விற்கும் கடைக்காரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் உப்பை கடைக்குள் வைத்திருக்க மாட்டார்கள். கடை வாசலுக்கு வெளியே வைத்திருப்பார்கள். அப்படி வைக்க இடம்மில்லாதவர்களும் வாசற்படியை ஒட்டியே வைத்திருப்பார்கள். அதற்க்கு காரணம் லக்ஷ்மியை கடைக்குள் இருந்து யாருக்கும் கொடுத்து விடக்கூடாது என்ற காரணத்தால் விற்பனைக்கு வைத்திருக்கும் உப்பை கடைக்குள் வைத்து யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்.
♥ கடைக்காரர்கள் உப்பை விற்கும்போதும் பணத்தை வாங்கிக்கொண்டு உப்பு பாக்கெட்டை நம்மையே எடுத்துக்கொள்ள சொல்லுவார்கள். விளக்கு வைத்தபின்பு பெரும்பலான கடைக்காரர்கள் உப்பை விற்கமாட்டார்கள்.
♥ கடைக்காரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அயோடின் கலக்காத கல் உப்பை மட்டுமே கடைக்குள் வைத்து யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அயோடின் கலந்த தூள் உப்பு கடைக்குள் பிற பொருள்களுடன் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
♥ அயோடின் கலக்காத கல் உப்பை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
♥ அயோடின் கலந்த உப்பு பக்கவிளைவுகளைத்தரும். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.
♥ வெள்ளிக்கிழமை வாங்கும் உப்பு செல்வத்தை குவிக்கும். வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும்; லக்ஷ்மிகடாட்சம் கிடைக்கும்.
♥ எந்த சூழ்நிலையிலும் ஜாடியில் உப்பு குறைவாக இருக்கக்கூடாது; நிறைந்து இருக்கவேண்டும்.
♥ எந்த சூழ்நிலையிலும் உப்பை யாருக்கும் தானம் கொடுக்கக்கூடாது. மிகமுக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் தானம் கொடுக்கக்கூடாது.
♥ யாருக்காவது உணவு பரிமாறும் சமயம் எக்காரணம் கொண்டும் உப்பை அவர்கள் கையில் தரக்கூடாது. அவருடைய இலையில் வைக்கலாம் அல்லது அவர்களையே எடுத்துக்கொள்ளும்படி கூறி உப்பு ஜாடியை பாத்திரத்தை அவர்கள் முன் வைத்து விடவேண்டும்.
♥ நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை மகாலட்சுமியுடன் ஒப்பிடுவது வழக்கம். ஏனெனில் மகாலட்சுமி கடலில் தோன்றியவர்; உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
♥ நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும்.
♥ துர்சக்தி மற்றும் கெட்ட அதிர்வுகளை உப்பு விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளதால், இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுகிறது.
♥ புதுமனை புகுவிழாவில் முதலில் புதுவீட்டிற்குள் உப்பைத்தான் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் எல்லா செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டி உப்புக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது.
♥ குளிக்கும்போது நீரில், அயோடின் கலக்காத கல் உப்பை கலந்து குளித்தால் உங்களை சுற்றியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப்போவதை உங்களால் உணர முடியும்.
0 Comments: