லோக நாயகி "பகவதீ கீதை"
வேதங்களை இரவில் சொல்வது வழக்கில் இல்லை அல்லவா?
அதே போல கண்ணன் சொன்ன பகவத்கீதையும் உபநிடதமாக (வேதமாகவே) கருதபடுவதால் அதை நாம் இரவில் சொல்வதில்லை.
பகவத்கீதை எப்படி இரவில் சொல்வதில்லையோ, பகவதீ கீதையான "திருப்பாவையையும்" இரவில் சொல்வது இல்லை.
மேலும் பகவத் கீதையை காட்டிலும், பகவதீ கீதை சிறந்தது என்று கூறியுள்ளனர்.
ஒரு முக்கிய காரணம் தினமும் காலை திருவாராதனம் சாற்றுமுறை கோஷ்டியில் அந்வயிப்பது பகவத்கீதை அல்ல பகவதீகீதையே ..
எப்படி என்றால் சிற்றம் சிறுகாலே என்று துளசி தளம் எம்பெருமான் திருவடிகளில் சேர்த்த பின்னே கோஷ்டி பூர்த்தி செய்து வருகின்றனர்..
கீதையில் "நாராயணன் தான் பரமபுருஷன் " என்று ஒரு அத்யாயத்தில் கூட சொல்லவில்லை கண்ணன்.
பகவதீகீதையான திருப்பாவையின் முதற்பாட்டிலேயே, யசோதை மடியில் உட்கார்ந்து இருக்கின்ற இளம் சிங்கம் நாராயணனே மறவாதீர்கள் என்று அருள்கிறாள்.
பகவானுடைய முக்கிய அடையாளம் சங்கமும், சக்ரமும். அந்த இரண்டை பற்றி கண்ணன் கீதையில் அடியோடு சொல்லவில்லை.
சங்கோடு சக்கரமேந்தும் தடக்கையன் என்று ஆண்டாள் திருவாக்கு.
வேதாந்தங்களில் புண்டரீகாக்ஷன் பகவான் என்று சொல்லியிருப்பதை கீதையில் ஓரிடத்திலும் சொல்லவில்லை கண்ணன்.
பங்கயக்கண்ணானைப் பாடு என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறுகிறாள்.
இம்மாதிரி இன்னும் அநேக விஷயம் ஸுலபமான முறையில் உபதேசம் பண்ணி இருப்பதோடு "வையத்து வாழ்வீர்காள் "என்று எல்லோரையும் அழைத்து உபதேசம் செய்து இருப்பது ஒன்று போதுமே.
செய்யாதன செய்யோம் என்று ஒரே வார்த்தையில் செய்யகூடாது என்று வேதங்களில் சொல்லியிருக்கின்ற கெட்ட காரியங்களை செய்ய கூடாது என்று உபதேசித்தாள்.
மேலும் பகவானுக்கும், ஜீவாத்மாக்களுக்கும் உடைய உறவை யாராலும் அழிக்க முடியாது என்றும், நமக்கு எந்த பலன் வேண்டுமானலும் அவனையே பிரார்த்தித்து பெற்று கொள்ள வேண்டும் என்றும் பலவிதமான வேதாந்த விஷயங்களை எந்தவிதமான பேதமும் இந்த மக்கள் அனைவரும் கூடி இருந்து குளிர அருள் செய்தவள் ஆண்டாள் ஆகும்.
ஆகையால் பகவத்கீதையை காட்டிலும் பகவதீகீதையே மக்களை சுலபமாக உஜ்ஜீவிக்கும் என்று பெரியோர்கள் கருத்து.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
0 Comments: