நாட்டில் மழை மற்றும் குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில் சளி, இருமல், தொண்டை வலி (Common cold, caugh, throat pain) போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பால் இடங்களில் குளிர் நிலவி வரும் சூழலில் சளி தொந்தரவு மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.
இதனால், பல நேரங்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. நீங்களும் இந்த பருவகால பிரச்சனைகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறீர்கள் என்றால் குளிர்காலத்தில் குறிப்பாக தொண்டையில் ஏன் தொற்று ஏற்படுகிறது மற்றும் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என சாரதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவா கூறும் தகவல்களை பார்க்கலாம்.
தொண்டை தொற்றுக்கு வழிவகுப்பது எது.?
குளிர் சீசன் தொடங்கும் போது வெப்பநிலை இயல்பாகவே குறையத் தொடங்குகிறது, இதனால் தொண்டை தொற்று, சளி மற்றும் இருமல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது பொதுவானது. குளிர்காலத்தில் வீசும் அசுத்தமான மற்றும் மாசுபட்ட காற்று நமது சுவாச மண்டலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது, இதனால் தொண்டை தொற்று இந்த சீசனில் வேகமாக பரவுகின்றது. இந்த சீசனில் நிலவும் வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று தொண்டையின் புறணியை எரிச்சலடையச் செய்து, அதன் இயற்கையான பாதுகாப்பு பொறிமுறையை பலவீனப்படுத்துகிறது.மேலும், குளிர்காலத்தில் மக்கள் மூடிய இடங்களில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள், இதனால் காற்றில் வைரஸ்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது.
குளிர் காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இல்லாதவர்கள் சளி அல்லது காய்ச்சல் போன்ற பருவகால வைரஸ்கள் உருவாக்கும் பாதிப்புகளில் மிகவும் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். மேலும், வறண்ட மற்றும் குளிர்ந்த காற்றில் காணப்படும் குறைந்த ஹியூமிட்டிட்டியானது nasal passages-களை உலர செய்கிறது. இதனால் பாக்டீரியாக்கள் எளிதாக நுழைகின்றன.
பாதுகாப்பாக இருப்பது எப்படி.?
குளிர் சீசனில் தொண்டை தொற்று, சளி மற்றும் இருமல் வராமல் தடுக்க உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் சுத்தம் & சுகாதாரத்தை பேணுவது மிக அவசியம். குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி குளிரை சமாளிக்க கூடிய வகையில் இருக்கும் இதமான ஆடைகளை அணிய வேண்டும். வழக்கமான அடிப்படையில் அடிக்கடி கை கழுவும் பழக்கமானது பாக்டீரியா பரவுவதை குறைக்கிறது.
உங்கள் தொண்டை ஈரமாக, பாதுகாப்பாக இருக்க உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருங்கள். வாய் கொப்பளிக்க வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து பயன்படுத்தவும். தவிர உங்கள் டயட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். கூட்டமிகுந்த இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்வதும், குளிர்ந்த காற்றில் திடீரென வெளியே செல்வதை தவிர்ப்பதும் உடல்நலனை பாதுகாப்பாக வைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.
0 Comments: