கேழ்வரகு கூழ் குடித்தால் உடனே வெளியேறி விடும்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு - 3 கப்
பச்சரிசி ரவை - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
செய்யும் முறை:
முதல் நாள் இரவு கேழ்வரகு மாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு கரைத்து மூடி வைத்து விட வேண்டும்.
மறுநாள் மாலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி ரவையை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பச்சரிசி வெந்து வரும் போது கரைத்து புளிக்க வைத்த மாவைக் கொட்டி நன்கு கிளறவும். அடிபிடிக்காமல் கிளற வேண்டியது அவசியம்.
கேழ்வரகு மாவும் வெந்து வரும் போது இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் இதில் தயிரும், தேவைப்பட்டால் வெங்காயத்தை பொடியாக நறுக்கியும் போட்டுக் குடிக்கலாம்.
0 Comments: