தேவையானவை:
மல்லிகைப் பூ கிரீன் டீத்தூள் ஒரு டீஸ்பூன்
பால் ஒரு கப்
பனங்கற்கண்டு தேவையான அளவு
மல்லிகைப் பூ தண்ணீர் ஒரு கப்
செய்முறை:
5 மல்லிகைப் பூக்களை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, 4 மணி நேரம் மூடி வைத்து வடிகட்டினால், மல்லிகைப் பூ சாறு இறங்கிய தண்ணீர் ரெடி. இந்த தண்ணீரோடு மல்லிகைப்பூ கிரீன் டீத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து
10 நிமிடங்கள் கொதிக்க விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் பால், பனங்கற்கண்டு சேர்த்து பாலை நன்றாக சூடாக்கவும். பனங்கற்கண்டு நன்றாகக் கரையும் வரை கலக்கவும். சூடான பாலையும், மல்லிகைப் பூ கிரீன் டீ கலவையையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
0 Comments: