பூசணிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
பொடிதாக நறுக்கிய பூசணிக்காய் - 150 கிராம்
சாம்பார்பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
*🪀தாளிக்க -*
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
🪀அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
🪀வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
🪀பூசணிக்காயில் நீர்ச்சத்து இருப்பதால் 10 நிமிடங்களில் வெந்து விடும். வெந்தவுடன் சாம்பார் பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
🪀இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், ரசம் சாதம், பரிமாறலாம்.
...................... 🪀....................
0 Comments: