தேவையானவை:
தண்ணீர் நான்கரை கப்
பால் ஒன்றரை கப்
கிரீன் டீத்தூள் ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
பட்டை ஒன்றில் பாதி
முழு மிளகு 4
கசகசா 30 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் 30 மில்லி
பொடியாக நறுக்கிய பிஸ்தாபருப்பு
கால் டீஸ்பூன்
பொடித்த பாதாம்பருப்பு ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர், கிரீன் டீத்தூள், பேக்கிங் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 8 நிமிடங்கள் மீண்டும் கொதிக்க விடவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் பட்டை, கசகசா, மிளகு, அரை கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சேர்த்து கொதிக்க விடவும். இனி டீத்தூள், பேக்கிங் சோடா கலவை மற்றும் பட்டை, கசகசா கலவை இரண்டையும் ஒன்றாக்கி 20 தடவை வரை சற்று உயர தூக்கி ஆற்றவும். இப்படி ஆற்றினால்தான் டீயின் நிறம் ரோஸ் ஆக மாறும். பிறகு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் ஏலக்காயை 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, டீயுடன் பாலைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாதாம், பிஸ்தா, ஃப்ரெஷ் க்ரீம், குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
பேக்கிங் சோடா சேர்ப்பதால் கலவை பொங்கி வழிய ஆரம்பிக்கும். உடனே அடுப்பில் இருந்து இறக்கி, பொங்குவது அடங்கியதும் மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
0 Comments: