சனி, 14 டிசம்பர், 2024

சுவையான ஆட்டு ஈரல் குழம்பு

சுவையான ஆட்டு ஈரல் குழம்பு


*சோற்றுடன் போட்டு சாப்பிடும் போது அவளோ ருசி*


 🪀ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி 
2 பட்டை ,2கிராம்பு ,1ஏலக்காய் 
சேர்த்து தாளிக்கவும் 

🪀10 சின்னவெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும் 

🪀சுத்தம் செய்த ஈரலை சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும்படி வதக்கி எடுக்கவும் 

🪀ஒரு மிக்ஸியில் 2 தக்காளி 
ஒரு ஸ்பூன் மிளகு 
ஒரு ஸ்பூன் சீரகம் 
அரை ஸ்பூன் சோம்பு , 
2 துண்டு இஞ்சி
5 பல்லு பூண்டு
 கொத்துமல்லி , 
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் ,
 மல்லித்தூள் ஒரு ஸ்பூன் 
சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து வதக்கிய ஈரலில் சேர்த்து நன்கு வதக்கவும் 

🪀அதில் ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து இறக்கினால் ஈரல் குழம்பு தயார் செய்து பார்த்து அசத்துங்கள்.
Previous Post
Next Post

0 Comments: