சோற்றுக்கற்றாழை, வெப்பமானபகுதிகளின் வயல்வரப்புகளிலும் உயரமான வேலிகளிலும் வளரும் சதைபற்றான தாவரம். கற்றாழையை பிளந்தால், நடுவில் நீர்ச்சத்துள்ள கொழகொழப்பான சதைப்பகுதிகாணப்படும். இதனைத்தான் சோறு என்பார்கள். சோறு மிகுந்த இந்த கற்றாழைதான் சோற்றுக்கற்றாழை எனப்படுகிறது. கத்தாழை, கற்றாழை, சிறு கத்தலை, குமாரி, கன்னி, ஆகிய பெயர்களும் உண்டு .
வெட்டுக்காயங்கள்குணமாக :
இலையைக் கீறி சதைப்பகுதியை வெளியே தெரியுமாறு செய்து அதை காயத்தின் மீது வைத்து கட்டுப் போடவேண்டும். காயம் ஆறும் வரை தினமும் இருமுறைகள் இவ்வாறு செய்யலாம் .
வெண்படைகுணமாக:
தினமும் புதிதாக கற்றாழையின் சோற்றை எடுத்து தோலின் மீது பூசி வர வெண்படைகுணமாகும்.
கண்எரிச்சல் மற்றும் கண் சிகப்பு குணமாக :
இரவில் கற்றாழையின் சோற்றை கண்இமைகளைமூடி அவற்றின் மேல் வைத்துக்கட்டவேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்றுநாட்கள் வரை செய்து வரவேண்டும்.
மூலநோய்குணமாக:
கற்றாழையின் இலையை முற்றிலும்நீக்கி சதையை நன்றாக கழுவி அதனுடன் இரண்டு பிடி முருங்கைப்பூ சேர்த்து நன்றாக அம்மியில் அரைக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து எலுமிச்சம்பழ அளவு தினமும் காலையில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஒருவாரம் இவ்வாறு செய்யலாம் இந்தகாலத்தில் உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
ஒரு கிலோவிளக்கெண்ணெய், ஒரு கிலோ பத்து முறைகழுவிய சோற்றுக்கற்றாழைச்சோறு, அரைக்கிலோபனங்கற்கண்டு, அரைக்கிலோ வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றைக் கலந்து நீர்சுண்டைக்காய்ச்சி காலை மாலை 15 மி.லி கொடுக்க மாந்தம் , வயிற்றுவலி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை தீரும்.
0 Comments: