வெள்ளி, 13 டிசம்பர், 2024

அருள்மிகு ஸ்ரீ மஹா சரஸ்வதி திருக்கோவில்.

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே..

அருள்மிகு ஸ்ரீ மஹா சரஸ்வதி திருக்கோவில்.


கோயிலின் முன்புறம் மூன்று நிலை ராசகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.

இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சங்கமித்ததாக தல வரலாறு கூறுகிறது.

ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரசுவதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கோயில் அமைந்துள்ள ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது. 

பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் கோயிலில் இங்குகுறித்து வைப்பதும் உண்டு.

கூத்தனூர்.
நன்னிலம் வட்டம்.
பூந்தோட்டம் அஞ்சல்.
திருவாரூர் மாவட்டம்.
Previous Post
Next Post

0 Comments: