நமக்கு நாமே மருத்துவர்
அகத்திக்கீரை!
அகத்தினை சுத்தம் செய்யும் ஆற்றல் நிறைந்ததால்,
இது "அகத்திக்கீரை" என்று பெயர் பெற்றது..
மருத்துவ குணங்கள்:
1.உடலில் எழும் பித்தத்தை தணிக்கிறது.
2.வயிற்றுப்புழுவைக் கொல்லும் ஆற்றல் உடையது.
3.நீர்க்கோவை மற்றும் தலைவலி தீரும்.
4.காயங்களை சரிசெய்ய உதவுகிறது.
5.வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமடைகிறது.
6.சொறி, சிரங்கு, தேமல், படை குணமடைகிறது.
7.இளநரை ஏற்படுவதைத் தடுக்கிறது.
8.இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நன்கு பால் சுரக்கும்.
9.உதடு வெடிப்பை சரி செய்கிறது.
10.உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருட்களை முறிக்கும்.
குறிப்பு:
முருங்கைக் கீரை வெந்து கெட்டது,
அகத்திக்கீரை வேகாமல் கெட்டது.
என்பது பழமொழி.. எனவே, அகத்திக்கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.
முக்கிய குறிப்பு:-
1. அகத்திக்கீரை ஆரோக்கியமாக இருப்பவர்கள் 20 நாளுக்கு ஒரு முறை மட்டும் எடுக்க வேண்டும்
.
2. கீரைகள் மாலை 4 மணிக்கு மேல் உண்ணக்கூடாது
3. உடல்நிலை சத்து குறைவாக இருந்தால் அகத்திக்கீரை சூப் தான் கொடுக்க வேண்டும்
4. உடல் சத்து குறைபாடு உள்ளவர்கள் வாரம் ஒரு முறை குடிப்பது நல்லது
சிறப்பு:
அகத்திக்கீரையை தானமாக கொடுப்பது சிறப்பு.
அதிலும் பசுக்களுக்குக்கு இக் கீரையை கொடுப்பதால் பசுக்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்கி நல் ஆரோக்கியத்துடன் பால் கொடுக்கும். அதன் கன்றுகளும் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும்.}
பூர்வ-கர்ம வினைகள் விலகும்
உண்மை காரணம்:-
இக்கீரையை உண்ணும் , பசுவின் பாலில் உடலுக்கு நன்மை பயக்கும் பல நற்குணங்கள் நிரம்பி இருப்பதால்,
இப்பாலை அருந்துபவர்களுக்கு இக்கீரையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
0 Comments: