சனி, 14 டிசம்பர், 2024

மதுரை மிளகாய் சட்னி

மதுரை மிளகாய் சட்னி


தேவையான பொருட்கள்
15 வரமிளகாயை 15 நிமிடங்கள் நீரில் நன்கு ஊற வைத்து எடுக்கவும். பின் அதோடு 10 உரித்த சின்ன வெங்காயம், ஒரு எலந்தைப்பழம் அளவு புளி, 4 மீடியம் சைஸ் தக்காளி, 5 பெரிய பல் பூண்டு, அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உப்பு போட்டு மேலே நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும். இதில் எதையுமே வதக்கக்கூடாது.

(ஓட்டல் ஸ்டைல்)

மேலே சொன்ன அதே செய்முறை தான் ஆனால் மிக்ஸியில் அரைத்த பின்பு அதை ஒரு கடாயில் போட்டு கொதிக்க விட்டு அதன் பின்பு உப்பு சேர்த்து தருவார்கள் இரண்டிலும் தாளிப்பு நமது பிரியம்! ஆனால் தேவைப்படாது.

இது பார்க்க தக்காளி சட்னி போலவே இருக்கும். ஆனா காரம் அனல் பறக்கும். பஞ்சு போன்ற கொதிக்க கொதிக்க தட்டில் விழும் சூடான இட்லிகளின் தலை மீது சிறிது.. 

நெய் / நல்லெண்ணெய் தடவி இந்த மிளகாய் சட்னியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ஆஹா இது மட்டும் போதும் எனக்கு என்பார்கள்.
Previous Post
Next Post

0 Comments: