சனி, 14 டிசம்பர், 2024

பூண்டு முறுக்கு

பூண்டு முறுக்கு


தேவையான பொருட்கள்
அரிசி மாவு,
பூண்டு,
பெருங்காயம்,
சீரகம்,
எள்,
வெண்ணெய்,
உப்பு,
எண்ணெய்.

🪀முதலில் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும்.

🪀ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும்.

🪀வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்த பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

🪀மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

🪀ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும்.

🪀பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு தயார்.
Previous Post
Next Post

0 Comments: