சனி, 14 டிசம்பர், 2024

பாசிப்பருப்பு கூட்டு

பாசிப்பருப்பு கூட்டு


 தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் - 150 கிராம் 
பாசிப்பருப்பு - 50 கிராம்   
சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி (சாம்பார் பொடி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

*🪀அரைக்க -*
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி

*🪀தாளிக்க -*
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் நறுக்கியது - 1/4 பங்கு 
கறிவேப்பிலை - சிறிது


🪀கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் காயம், மஞ்சள்தூள் சேர்த்து பருப்பு முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

🪀பீர்க்கங்காயை தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

🪀கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

🪀வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் 2 நிமிடத்தில் வெந்து விடும்.

🪀வெந்தவுடன் சாம்பார்பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

🪀மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும்.

🪀கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பீர்க்கங்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி. 

🪀இந்த கூட்டை ப்ளைன் சாதத்தில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். 

🪀புளிக்குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

..........…...…... 🪀........................
Previous Post
Next Post

0 Comments: