திங்கள், 16 டிசம்பர், 2024

காசி விஸ்வநாதர் கோவில்..!

தினம் ஒரு திருத்தலம்

சிவபெருமானின் காட்சி சித்தரிக்கும் சிற்பங்கள் என்னவாக இருக்கும்?


                  
காசி விஸ்வநாதர் கோவில்..!

*அமைவிடம்:*

👉 திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் தாத்தையங்கார்பேட்டை என்ற ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலாகும்.

👉 திருச்சியிலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

*வரலாற்றுச் சிறப்பு:*

👉 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் தாத்தையங்கார்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் "சிறிய காசி" என்று அழைக்கப்படுகிறது.

👉 இக்கோவிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை பல்லவ கட்டிடக்கலை அமைப்பில் அமைந்துள்ளன.

👉 ராஜகோபுரம், வசந்த மண்டபம் போன்றவை நாயக்கர் கால கட்டிடக்கலை அமைப்பில் உள்ளன.

👉 இக்கோவிலின் கருவறையில் உள்ள லிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

👉 இந்த கோவிலில் காணப்படும் அரிய சிற்பங்களில், சிவபெருமானின் திருமண காட்சியை சித்தரிக்கும் சிற்பமும் உள்ளது.

*சிறப்பு வழிபாடுகள்:*

👉 எதிரிகளின் தொல்லையை நீக்கும் பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகிறது.

👉 திருமண தடை நீங்குவதற்கும், கல்வி தடைகள் நீங்குவதற்கும் இங்கு வழிபாடு செய்வது வழக்கம்.

👉 குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

👉 தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி நாட்களில் பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

👉 இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
Previous Post
Next Post

0 Comments: