சனி, 14 டிசம்பர், 2024

சுலைமானி டீ..

சுலைமானி டீ....!


தேவையானவை:

தண்ணீர் 3 கப்
டீத்தூள் கால் டீஸ்பூன்
பட்டை ஒரு அங்குலம்
ஏலக்காய் 2
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
எலுமிச்சைச்சாறு  
ஒரு டீஸ்பூன்
சர்க்கரை 3 டீஸ்பூன் 


செய்முறை:

பட்டை மற்றும் ஏலக்காயை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீருடன் ஏலக்காய், பட்டை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் டீத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை விட்டு இறக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும். டீயை வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
Previous Post
Next Post

0 Comments: