தேவையானவை:
கருப்பட்டி கால் கிலோ (தூளாக்கவும்)
டீத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 4 டம்ளர்
பால் அரை டம்ளர்
இஞ்சி ஒன்றரை அங்குல துண்டு (தட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், இஞ்சி, கருப்பட்டி சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். இத்துடன் டீத்தூளையும் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, 10 நிமிடங்கள் நன்கு ஆற விடவும். பிறகு மேலே தெளிந்தநீராக இருப்பதை மட்டும் வடிகட்டி, சூடான பாலில் சேர்த்துப் பரிமாறவும். இந்த காபியில் முறுக்கு அல்லது மிக்ஸர் சேர்த்து குடிக்கலாம் அல்லது காபி குடித்துவிட்டு, ஒரு கடி மிக்ஸரை கடித்துக் கொள்ளலாம்.
0 Comments: