திங்கள், 9 டிசம்பர், 2024

இன்றைய தேவைக்கான இயற்கை மருத்துவம்.

இன்றைய தேவைக்கான இயற்கை மருத்துவம்.


நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. 

தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஆனால் சிலர் சத்து குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

 பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். 

அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மிகவும் சிறந்தது.

மருத மரமும் இதன் முக்கிய மருத்துவ பயன்கள் என்ன என பார்க்கலாம் வாங்க!.

அதன்படி மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறுவார்கள். 

அந்த அளவுக்கு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 

அதன் இலை, பட்டை, பழம் மற்றும் விதை அனைத்தும் பயன் தருபவை. 

அதன் பட்டையை கசாயம் வைத்து குடித்து வந்தால் எந்த நோயும் வராது.

அதிலும் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை குணமாக்குவதற்கு இது மிகவும் சிறந்தது.

தேவையான பொருட்கள்:-

மருதம் பட்டை பவுடர்-4 கிராம்.
டீத்தூள்-சிறிதளவு.
தண்ணீர்-350 மிலி
வெல்லம் அல்லது கருப்பட்டி தேவையான அளவு
பசும்பால்- 40 மில்லி.


செய்முறை:

பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அதன் பிறகு 100 மில்லி அளவுக்கு வற்றியதும்

அதனுடன் வெல்லம் மற்றும் பால் சேர்த்து வடிகட்டி குடிக்க வேண்டும். 

மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. 

அதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

மாரடைப்பு பிரச்சனையை 50% வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

மூச்சுத்திணறல் பிரச்சனையை சரிசெய்யும்.

இதனை தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் எந்த நோயும் பக்கத்தில் வராது.

முக்கிய குறிப்பு:

ஆண்டு முழுவதும் இதனை பருகக்கூடாது.

இரண்டரை மாதம் குடித்து விட்டு சிறிது இடைவெளி விட்டு அதன் பிறகு குடிக்கலாம்.

மருதம் பட்டையின் மருத்துவப் பயன்கள்!  

எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். 

அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது.

என்று மருத மரத்தின் புகழ் பாடுகின்றனர் சித்த மருத்துவர்கள்.

இந்த மரத்தை நம் முன்னோர்கள் சாலை ஓரங்களில் நட்டனர்.


இப்போதும், சென்னை முதல் செங்கோட்டை வரை செல்லும் சாலையில் அதிமாக இருக்கும் மரங்கள் மருத மரமே. 

அதன் பயன்கள் என்னென்ன? என்று பார்ப்போம்!

1. மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. 

இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.

வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.

மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும்,

மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. 

குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.

மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் *ரத்தக்கொதிப்பு,

இதய படபடப்பு,

தூக்கமின்மை, 

நீரிழிவு பிரச்னை,

 கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.

ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. 

புற்றுநோய்க்கு சிறந்த மூலிகை:-

கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.

மருத்துவ முறை 1.


மருதம் பட்டை - 200 கிராம், சீரகம் - 100 கிராம், 
சோம்பு - 100 கிராம், 
மஞ்சள் - 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.

மருத்துவ முறை 2.


தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க...

மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.

மருத்துவ முறை 3.

 ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் 
மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம். 

மருதம் பட்டை - 100 கிராம் அளவிலும், 
சீரகம் - 25 கிராம் அளவிலும்
சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால்
இதயம் வலுவாகும்.
மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும்.

 இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.
Previous Post
Next Post

0 Comments: