சனி, 14 டிசம்பர், 2024

உருளைக்கிழங்கு தயிர் குழம்பு

உருளைக்கிழங்கு தயிர் குழம்பு


தேவையான பொருட்கள்

பெரிய உருளைக்கிழங்கு - 3, நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய பச்சை மிளகாய் - 3, எண்ணெய் - 2 tbs, கடுகு - 1 டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - சிறுதுண்டு, இஞ்சி-பூண்டு விழுது - 1 tbs, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1 tbs, மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன், ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 1tbs, தயிர் - 250 மிலி + 1/2 கப் தண்ணீர், உப்பு - தேவைக்கு, மாங்காய் தொக்கு /மாங்காய் ஊறுகாய் - 1 tbs.

(புளிப்பில்லாத தயிரை சிறிது நீர் சேர்த்து லஸ்ஸி பதத்தில் நன்கு அடித்து கலக்கி வைக்கவும்)

 செய்முறை : முதலில், உருளைக்கிழங்கை மென்மையாக அவித்து தோலுரித்து சிறிய கடலை மிட்டாய் அளவில் நறுக்கவும். ஒரு கடாயில் 1tbs எண்ணெய் விட்டு சூடானதும் கிழங்கைப் போட்டு வெளிர் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில், மீதமுள்ள எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி..

கடுகு, கிராம்பு, பட்டை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரிய வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மல்லி/ மஞ்சள்/ அம்சூர் / மிளகாய் தூள்களைச் சேர்க்கவும்! இந்த மசாலா நன்றாக வேகும் வரை வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். 

இதே சூட்டில் கலக்கி வைத்த தயிரைச் சேர்த்து நன்கு கலக்கவும் பின்னர் வறுத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள் & மல்லித் தழைகளை சேர்க்கவும். இதன் மேல் மாங்காய் தொக்கினை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும். சோறு, ரொட்டி வகைகளுக்கு அற்புதமான டிஷ்! அடை தோசைக்கும் பெஸ்ட்! 

தயிர் சேர்த்துக் கிளறும் போது அடுப்பு எரியக் கூடாது! மசாலா கிளறிய சூட்டிலேயே தயிர் சேர்த்தால் போதும்!

தயிர்க்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் உங்கள் தேவைக்கு சிறிது வெந்நீர் ஊற்றி கலக்கி உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.

பேபி பொட்டேட்டா எனில் முழுதாக 12 கிழங்குகளை சேர்க்கவும். தயிரில் சிறிது சீரகம் தாளித்து சேர்ப்பது கூடுதல் ருசி தரும்.

பிரியாணி, தக்காளி போன்ற மசாலா கலந்த சாதங்களுக்கும் இந்த க்ரேவி அல்டிமேட்டாக பொருந்தும்.

வீட்டில் பஜ்ஜி வகைகள் எது செய்தாலும் அதற்கு இதை தொட்டுக் கொள்ளவும்! ருசி பிரமாதமாக இருக்கும்.
Previous Post
Next Post

0 Comments: