பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களைக் கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் மருத்துவ நாடாக சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பழங்களினால் ஆனா பழ சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட்
ஜூஸில் அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கப் பெறுவோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
½ கட்டு புதினா, கொத்தமல்லி
2 தக்காளி
2 ஆரஞ்சு
2 எலுமிச்சை
இஞ்சி சிறிது
½ ஸ்பூன் சீரகம்
1 கப் சர்க்கரை
செய்முறை:
சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் இஞ்சி, வடிகட்டவும்.
இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து,சர்க்கரை, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.
பிரிட்ஜில் குளிர வைக்கவும்.
பரிமாறும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டால் சுவையும் மீண்டும் கூடும்.
0 Comments: