வெள்ளி, 13 டிசம்பர், 2024

ஸ்ரீரங்கத்தில் கார்த்திகைத் திருவிழா:

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

ஸ்ரீரங்கத்தில் கார்த்திகைத் திருவிழா: 



பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருத்தலம், நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இங்கு, கார்த்திகைத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி விழாவை "ஸ்ரீ பாஞ்சராத் தீபம்' என்று போற்றுவர். கார்த்திகை விழா அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு காலை ஒன்பது மணியளவில் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெறும். மாலை உத்தம நம்பி சுவாமிகளின் இடை விளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.00 மணிக்குள் சக்கரத்தாழ்வார் சந்நிதிமுன் பெருமாள் எழுந்தருள்வார்.

அப்போது, கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனையை பெருமாள் முன்நிலையில் ஏற்றுவார்கள். பெருமாள் அக்காட்சியை கண்டருள்வார். பிறகு, சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

அங்கே, அரையர்கள், திருமங்கையாழ்வார் பாசுரத்தைப் பாடுவார்கள். அதற்குப்பின் வரவிருக்கும் மார்கழி மாதத் திருநாளுக்காக நம்மாழ்வாருக்கு விவரமாக கடிதம் எழுதுவார்கள். இதனை, "ஸ்ரீ முகப்பட்டயம்' என்பர். நம்மாழ்வாருக்கு ஸ்ரீ முகப்பட்டயம் எழுதியருளும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு, பெருமாள் கோயிலுக்குச் செல்வார். 

பெருமாளை தரிசித்து, அவர் முன்னிலையில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியைத் தரிசித்தால் நம் முன் வினைப் பாவங்கள் நீங்கி புனிதம் கிட்டும் என்பது ஜதீகம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
Previous Post
Next Post

0 Comments: