பாரிஜாத மரத்தின் பூக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வறட்டு இருமல் தொண்டையைப் போக்க, இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது. செடியின் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறை வயிற்று வலியைப் போக்கப் பயன்படுகிறது.
சுமார் 100 கிலோ அளவுள்ள பூக்களிலிருந்து 160-200 கிராம்கள் வரையிலான அத்தர் எடுக்கப்படுகின்றது. இதிலிருந்து பன்னீர் மற்றும் பலவிதமான வாசனைத் திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன் பூக்கள் தலை நீர்க்கோர்வை, கண் நோய், தொண்டை வீக்கங்களைக் குணப்படுத்தும். இதன் பூ வயிற்று உப்புசத்திற்கும் பயன்படுகிறது.
பாரிஜாத இலைகள்
ஆயுர்வேதத்தில் பாரிஜாத இலைகள் பல்வேறு வகையான காய்ச்சல், இருமல், மூட்டுவலி, புழுத்தொல்லை போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க பயன் படுத்தப்படுகின்றன.
இதனுடைய இலைச்சாறு கசப்பானது மற்றும் டானிக்காக செயல்படுகிறது. மூட்டுவலி, மலச்சிக்கல்ம் புழு தொல்லை இருக்கும் போது இந்த பூக்களை கொண்டு கஷாயம் செய்து குடிப்பது நன்மை அளிக்கும்.
0 Comments: