செவ்வாய், 17 டிசம்பர், 2024

உடலை வலுவாக்கும் சத்தான முள்முருங்கைஅடை செய்வது எப்படி?

உடலை வலுவாக்கும் சத்தான முள்முருங்கை
அடை செய்வது எப்படி?



தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - அரை கப்,
முள் முருங்கை இலை 
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு -5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், பூண்டு,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, சீரகம், கறிவேப்பிலை, முள் முருங்கை இலை,வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி....
Previous Post
Next Post

0 Comments: