தேவையான பொருட்கள்
சிறிய உருளைக்கிழங்கு – 10 (அல்லது மத்தியம அளவு 4-5)
பூண்டு – 10 பற்கள் (நறுக்கவும்)
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
செம்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வெட்டிக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் சூடாக்கி பூண்டு தாளித்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்க்கவும்.
3. சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.
4. கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மொறுமொறுப்பான, சுவையான உருளைக்கிழங்கு பூண்டு மசால் ரெடி!
*சிறந்த ஸ்டார்ட்டரா பரிமாறுங்க, ஒத்தையா சாப்பிட்டாலும் ருசிக்கும்!*
0 Comments: