திங்கள், 20 ஜனவரி, 2025

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.


மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. 
 
* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். 
 
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். 
 
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். 
 
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். 
 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!
நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!!!



ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது. இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது. இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

புரோஸ்டேட் விரிவு, சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்...

 பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும், உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஒரு கப் தண்ணீர். ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :

பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு (அதிகமான சிறுநீரை வெளியேற்றும்) ஆகும். இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை : 

இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும். இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும். பின்பு அதை வடிகட்டி விட வேண்டும். இப்போது பூசணி விதை டீ ரெடி. இதை நீங்கள் பருகலாம். இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது!!!