திங்கள், 13 ஜனவரி, 2025

வரகரசி பொங்கல்

தைத் திருநாளில் பாரம்பரிய ரெசிபிகள்

வரகரசி பொங்கல்


தேவையான பொருட்கள்:
வரகரசி - 2 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
பால் - 2 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
முந்திரி,திராட்சை, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:
முதலில் அடி கனமான பாத்திரத்தில் பாசிப்பருப்பு மற்றும் வரகரசி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குழையும் வரை வேக வைக்கவும். 5 நிமிடத்திற்குப் பிறகு இதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இதையடுத்து வெல்லத்தை போட்டு கிளறவும். உங்களுக்குத் தேவையென்றால் வெல்லத்தைப் பாகு போன்று காய்ச்சியும் பொங்கலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
varagarsi pongal
இறுதியில் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை, போன்றவற்றை லேசாக வறுத்து பொங்கலில் சேர்த்துக் கொண்டால் போதும் ருசியான வரகரசி பொங்கல் ரெடி.
வரகரசி பொங்கல் மட்டுமில்லாது உழவர்கள் தங்களது நிலத்தில் விளைந்த சாமை, தினை போன்ற சிறு தானியங்களைக் கொண்டும் விதவிதமான பொங்கல் சமைத்து மகிழ்வார்கள்.
Previous Post
Next Post

0 Comments: