இதில் உள்ள பெருநெல்லி ஒரு காயகர்ப்ப மூலிகை ஆகும்.
அதுமட்டுமல்ல இது ஒரு பாரம்பரியமான பானமாகும் !!!
இது உடம்பில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற வல்லமை படைத்தது !!!
நமது உடலில் உள்ள சப்தநாடிகளையும் சீர் படுத்துகிறது !!!
இதனின் அற்புதத்தை தாங்கள் நாளடைவில் உணர்வீர்கள் சோம்பல் , இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், இரத்த நீரழிவு , உடல் பருமன், உடல் சோர்வு , தலைவலி , உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் நாள்பட முன்னேற்றம் மற்றும் பூரண குணம் அடைவீர்கள் !!!
நமது சித்தர்கள் உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தார்கள் அல்லவா !!!
இது போன்ற உணவுகளே அவர்கள் ஆரோக்கியத்திற்கும் தேஜஸ்சுக்கும் முதன்மையான காரணமாக இருந்துள்ளது !!!!
தேவையான பொருட்கள்:
பெருநெல்லி 1
இஞ்சி 1 இன்ச் ( தோல் நீக்கியது)
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
எலுமிச்சம்பழ பாதி ( பொடியாக நறுக்கியது)
இளநீர் 1
செய்முறை:
1. பெருநல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. தோல் நீக்கிய இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
3. கறிவேப்பில்லயை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
4. பாதி எலுமிச்சம்பழத்தை நான்கு பாகங்களாக நறுக்கி கொள்ள வேண்டும்.
5. இப்பொழுது மிக்ஸியில் மேலே குறிப்பிடபட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக ஜூஸ் அடித்து கொள்ள வேண்டும்.
6. இந்த ஜூஸை இளநீரில் நன்றாக கலந்து கொள்ளவும்.
7. தினமும் காலை 7:30 மணியளவில் இந்த பழச்சாறை எடுத்து கொண்டால் மிகவும் அற்புதமாக உணரவும்.
0 Comments: