ரத்தம் சுத்தமாக, உடல் வலிமை பெற பொடுதலைக் கீரையுடன், கடுக்காய் (1), நெல்லிக் கனி (1), தான்றிக்காய் (1) இவை மூன்றையும் தட்டிப் போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
பேன், பொடுகு பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரைச் சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெய்யில் குழைத்து, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால், பேன், பொடுகு பிரச்சனைகள் நிரந்தரமாகத் தீரும்.
ரத்தம் சுத்தமாக, உடல் வலிமை பெற பொடுதலைக் கீரையுடன், கடுக்காய் (1), நெல்லிக் கனி (1), தான்றிக்காய் (1) இவை மூன்றையும் தட்டிப் போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், உடல் வலிமை உண்டாகும்.
சர்க்கரை நோய் கட்டுப்பட பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
வெள்ளைப் படுதல் பிரச்சனை தீர பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நிரந்தரமாகத் தீரும்.
சிறுநீர் பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சளி, கபம், நுரையீரல் பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சளி, கபம், நுரையீரல் நோய்கள் குணமாகும்.
0 Comments: